6.4.12

வெள்ளைப்பூண்டு

கடுமையான மணமுடைய குமிழ் வடிவக் கிழங்கினையும் தட்டையான இலைகளையும் உடைய சிறுசெடி. கிழங்கு 10&12 பற்களாக உடையும் தன்மையுடையது. தமிழகமெங்கும் பயிரிடப்பெறுகிறது. பலசரக்குக் கடைகளில் கிடைக்கும். கிழங்குகளே மருத்துவப் பயனுடையவை. பசிதூண்டுதல், செரிமானம் மிகுத்தல், வயிற்று வாயு அகற்றல், சிறுநீர் பெருக்குதல், குடற்புழுக்கொல்லுதல், கோழையகற்றுதல், உடல் தேற்றுதல், உடலுரம் மிகுத்தல், வியர்வை பெருக்குதல், நோவு தணித்தல், அழுகலகற்றல், திசுக்களழித்தல், தாகமகற்றுதல், காய்ச்சல் தணித்தல், என்புருக்கி தணித்தல், காமம் பெருக்குதல் ஆகிய மருத்துவப் பண்புகளையுடையது.

1. 10 கிராம் உரித்த வெள்ளைப் பூண்டை பாலில் வேக வைத்துக் கடைந்து சாப்பிட வாயு, செரியாமை, சளி ஆகியவை தீரும். குடல் புழுக்கள் மடியும்.

2. பூண்டை இழைத்துப் பருக்கட்டிகளில் பூச அவை உடைத்துக் கொள்ளும். வெள்ளைப் பூண்டின் சாற்றில் நவச்சாரத்தைக் குழைத்து வெண்மேகத்தில் தடவி வர வெண்ணிறம் மாறி இயல்பு நிறமாகும்.

3. 10 கிராம் உரித்த வெள்ளைப் பூண்டை 50 மி.லி. நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி இரண்டொரு துளிகள் காதில் விட்டு வரக் காது வலி, காது மந்தம் ஆகியவை தீரும்.

4. வண்டு, குளவி, பூச்சி ஆகியவை கடித்த இடத்தில் வெள்ளைப் பூண்டை அரைத்துக் கட்டி எரிச்சல் தாங்க முடியாத நிலையில் எடுத்து விட நஞ்சு அகலும். G.JK Media Works Health Team 2011

Ingen kommentarer:

Legg inn en kommentar