13.1.13

அந்த '3' நாட்களில் உறவு கொள்ளலாமா?


மாதவிடாய் என்பது பெண்களிலே  சாதாரணமாக நடைபெறும் ஒரு நிகழ்வு.இதன் போது கருப்பையின் உட்பகுதி பிரிந்து பெண்ணுறுப்பு வழியே வெளியேறும்.இந்த மாதவிடாய் நேரத்தில் உடலுறவு கொள்ளலாமா என்று சந்தேகம் நிறையப் பேரின் மனதில் இருக்கலாம். இதுபற்றி பல மூட நம்பிக்கைகளும் நம்மிடையே இருக்கின்றன.

பெண்களுக்கு வரும் பீரியட்ஸ் சமயத்தில் உறவு வைத்துக் கொள்ளலாமா? இது குறித்த சில தகவல்களை பார்ப்போம். பீரியட்ஸ் சமயத்தில் தங்கள் வேதனையை ஆண்கள் புரிந்து கொள்ளவில்லையென்று எத்தனையோ பெண்கள் குமுறுவது உண்மைதான். பீரியட்ஸ் சமயத்தில் தங்களது துணை  தொந்தரவு பண்ணுவதாக சில பெண்கள் புகாராகவே கூறுமளவிற்கு இந்த விஷயம் போயுள்ளது. சில சமயங்களில் அந்த 3 நாட்களின் போது ஆண்கள் பிடிவாதத்தை காட்டி நேரடியான உறவை மேற்கொள்ளாமல், தங்களது இச்சையை தணித்து கொள்கிறார்கள்.

மாதவிடாய் நாட்களின் போது கர்ப்பபையின் உட்புற சுவர்கள் சிறிது பலவீனம£கவும், மேலும் உதிரப் போக்காகவும் இருக்கின்ற பட்சத்தில் எளிதில் தொற்று நோய்கள் தொற்றி கொள்ளும் அபாயம் இருக்கிறது. அந்த சமயத்தில் உடலுறவு வைத்துக் கொண்டால். அடுத்தடுத்து ஏற்படும் பீரியட்ஸ் சமயங்களில் ரத்தபோக்கு. வலி. எரிச்சல், கர்ப்பபையில் கட்டி போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

உண்மையில் மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடுவதால் பல நன்மைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக மாதவிடாய் காலத்திலேயே ஒரு பெண்ணுக்கு வயிற்று சம்பந்தமான உபாதைகள் , மன உளைச்சல் போன்றவை சாதாரணமாக ஏற்படலாம். பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண் மாதவிடாய் நேரத்தில் உறவில் ஈடுபட்டால் இந்தப் பிரச்சினைகள் குறைய வாய்ப்பு உள்ளது.மேலும் மாதவிடாய் நேரத்தில் உறவில் ஈடுபடும் போது மற்றைய நாட்களில் உறவில் ஈடுபடும் போது கிடைக்கும் திருப்தியைவிட அதிக திருப்தி ,கிடைப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம் மாதவிடாய் நேரத்தில் பெண்ணின் உறுப்புகள் அனைத்தும் ஹார்மோன்களால் மாற்றமடைந்து காணப்பட்டு உறவின் இன்பத்தை அதிகரிக்கின்றன.

மேலும் நம்முடைய சமூகத்தில் உள்ள பிழையான நம்பிக்கை போல இந்த காலத்தில் உறவில் ஈடுபடுவதால் ஆணுக்கோ அல்லது பெண்ணின் கருப்பைக்கோ எந்தவிதமான பாதிப்பும்ஏற்படுவதில்லை.மேலும் மாதவிடாய் காலத்தில் உறவு வைத்தால் கருத்தரிப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு தான். ஆனாலும் மிகவும் அரிதாக  இந்தக் கருத்தரிக்கும் வாய்ப்பும் உள்ளது. ஆகவே குவா குவாவை  தவிர்க்க விரும்புபவர்கள் நிச்சயமாக கருத்தடை முறைகளை உபயோகித்து கொள்ளுங்கள்...(dk)G.JK Media Works Health Team 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar