10.7.11

நரம்புகளை வலுப்படுத்தும் புளியங்கொட்டை

மூளை, முதுகெலும்பு ஆகியவற்றில் உள்ள நரம்புகள் சேதம் அடைந்து இருந்தால் அவற்றை குணப்படுத்தி மீண்டும் வளர உதவும் மருந்து ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.இந்தமருந்து புளியங்கொட்டையில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது. பர்க்கின்சன் போன்ற நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்துவதற்கான சிகிச்சையில் இந்த மருந்து ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மருந்தை சர்வதேச விஞ்ஞானிகள் குழு பரிசோதித்து பார்த்து இது சேதம் அடைந்த நரம்பு செல்களை குணப்படுத்துவதில் மிகப்பெரிய பங்காற்றும் என்று தெரிவித்துள்ளது.
இந்த மருந்தை காயம்பட்ட இடத்தில் திரவமாக ஊசி மூலம் செலுத்த முடியும் என்றும் அந்தக் குழு தெரிவித்தது.
G.JK Media Works Health Team 2011

Ingen kommentarer:

Legg inn en kommentar