24.8.11

புற்றுநோய்க்கு மருந்தாகும் குங்குமப் பூ

கல்லீரல் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கு குங்குமப்பூ உதவும் என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.ஐக்கிய அரபு குடியரசு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அமின் தலைமையிலான குழுவினர் கல்லீரல் புற்றுநோயை கட்டுப்படுத்துவது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.
எலியைக் கொண்டு சோதனை மேற்கொண்டனர். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட எலிகளுக்கு 2 வாரங்களுக்கு தினமும் குங்குமப் பூவை வெவ்வேறு அளவுகளில் கொடுத்து வந்தனர்.
பின்னர் செயற்கையாக கல்லீரல் புற்றுநோயை உருவாக்குவதற்கான டைஎத்தில் நைட்ரோசமைன்(டென்) என்ற மருந்தை செலுத்தினர். 22 வாரங்கள் கழித்து பரிசோதனை செய்ததில் அதிக அளவில் குங்குமப் பூ கொடுக்கப்பட்ட எலிகளுக்கு குறைவாக கொடுக்கப்பட்ட எலிகளைவிட புற்றுநோய் செல்களின் வளர்ச்சி குறைவாக காணப்பட்டது.
இதன் மூலம் குங்குமப் பூ கல்லீரல் புற்றுநோயை கட்டுப்படுத்தும் என உறுதி செய்தனர்.
உணவுப் பொருட்களுக்கு ஆரஞ்ச் வண்ணம் கொடுப்பதற்காக குங்குமப் பூ பயன்படுத்தப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட இது கல்லீரல் புற்றுநோய்க்கு காரணமாக செல்களை அழிக்கிறது அல்லது வளர்வதைக் கட்டுப்படுத்துகிறது என அமின் தெரிவித்தார்.
G.JK Media Works Health Team 2011

Ingen kommentarer:

Legg inn en kommentar