15.3.11

கொழுப்பை எதிர்க்கும் உணவு: ஓட்ஸ்
இன்றைய அவசர உலகில் கிடைத்ததை உள்ளே தள்ளி விட்டு அலுவலகத்திற்கும், வீட்டிற்குமாக ஓடிக் கொண்டிருப்பவர்கள் சில ஆண்டுகளிலேயே உடல் பருமன், தொப்பை என பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.மேற்படி உடல் பருமன் மற்றும் தொப்பை போன்றவை எட்டி பார்த்த பின்னர் தான் சாப்பிடும் உணவு குறித்த விழிப்புணர்வே நம்மவர்களுக்கு எட்டி பார்க்கிறது. அப்படியானவர்களுக்கான கொழுப்பைக் குறைக்கும் மற்றும் அதற்கு எதிராக போராடும் உணவு தான் ஓட்ஸ்.
உடல் மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கப்படும் உணவு பட்டியலில் முதன்மையாக இடம் பெறுவது இது. நார்சத்து மிகுந்த இந்த ஓட்ஸ் நமது உடலின் ஆரோக்கியத்தை பராமரிப்பதிலும், சர்க்கரை நோய், இருதய நோய் போன்ற பல்வேறு நோய்களுக்கு எதிராக நம்மை பாதுகாக்கிறது.
ஓட்ஸில் "பீட்டா குளூகான்" என்ற ஒருவகையான சிறப்பு நார்ச்சத்து அடங்கியுள்ளது. இந்த நார்ச்சத்து நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க மிகவும் உதவுகிறது. அதே சமயம் நல்ல கொழுப்பின் அளவு மாறாமல் அப்படியே இருப்பது தான் இதிலுள்ள தனி சிறப்பு.
இருதய நோய் வராமல் தடுக்கவும், கெட்ட கொழுப்பை குறைக்கவும் உலகம் முழுவதுமுள்ள மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் ஒரே முழு தானிய உணவு இந்த ஓட்ஸ் தான்.
உடலில் மிக அதிக கொழுப்புடையவர்கள் கூட(220 மில்லி கிராமுக்கும் மேல்) நாளொன்றுக்கு வெறும் 3 கிராம் ஓட்ஸை அதாவது ஒரு சிறிய கிண்ணம் அளவு உட்கொண்டால் கூட அதிகப்படியான கொழுப்பு முற்றிலும் குறைந்து விடுவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
G.JK Media

Ingen kommentarer:

Legg inn en kommentar