10.3.12

ஆரோக்கியமா​ன எலும்பு, தசைகளை உருவாக்க உதவும் கொக்கோ

கொக்கோவானது ஆரோக்கியமான எலும்புகளையும், தசைகளையும் உற்பத்தி செய்வதற்கு பெரிதும் உதவி புரிவதாக புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.அத்துடன் இதயம் சம்மந்தமான நோய்களிலிருந்தும், நீரிழிவு நோய்களிலிருந்தும் பாதுகாப்பதாகவும் மேலும் கண்டறியப்பட்டுள்ளது.
இவை உடைந்த எலும்புகளிலுள்ள கலங்களில் காணப்படும் மைரோகொன்ரியா என்ற பதார்த்தத்திற்கு அதிகளவு சக்தியை வழங்கி வளர்ச்சியடைய செய்வதன் மூலம் திடமான எலும்புகளை உருவாக்குகின்றன.
அதே போன்று இரசாயன சக்தியை கொண்ட குறித்த கலங்களின் செயற்பாடு மூலம் மந்தமான இதயத்துடிப்பை அதிகரிக்க செய்கின்றது.
மேற்குறிப்பிட்ட குறைபாடுகளை உடையவர்கள் நாள்தோறும் 100 மில்லிகிராம் கொக்கோ வீதம் மூன்று மாதங்களிற்கு தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது அக்குறைபாடுகளிலிருந்து விடுதலை கிடைக்கின்றது எனவும் குறித்த ஆராய்ச்சியிலிருந்து தெரியவந்துள்ளது.
G.JK Media Works Health Team 2011

Ingen kommentarer:

Legg inn en kommentar