6.4.12

ஆவாரை

பளிச்சிடும் மஞ்சள் நிறப் பூக்களை உடைய அழகிய குறுஞ்செடி. மெல்லிய தட்டையான காய்களையுடையது. தமிழகத்தின் எல்லாப்பகுதிகளிலும் தானே வளர்வது. இதன் பட்டை தோல் பதனிடப் பயன்படுகிறது. இலை, பூ, காய், பட்டை, பிசின், வேர் ஆகிய அனைத்துப் பகுதிகளும் மருத்துவப் பயனுடையவை.

சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருக்கும் தன்மையுடையது. விதை காமம் பெருக்கியாகச் செயற்படும்.

1. பூச்சூரணத்தையோ, பூவைக் குடிநீராக்கிப் பாலில் கலந்தோ, இதழ்களைக் கறிக்கூட்டாகவோ நாள்தோறும் பயன்படுத்த மேக வெட்டை, தேக உட்சூடு, உடல் நாற்றம், உடலில் உப்புப் பூத்தல், வறட்சி, ஆயாசம் நீங்கும். உடலுக்குப் பலத்தைத் தரும். தேகம் பொன்னிறமாகும்.

2. ஆவாரையின் பஞ்சங்க (வேர், இலை, பட்டை, பூ, காய்) சூரணம் 10 கிராம் வீதம் காலை, மதியம், மாலை வெந்நீருடன் கொள்ள பிரமேகம், மதுமேகம், மிகுதாகம், மிகுபசி, உடல் மெலிவு, உடல் எரிச்சல், உடல் முழுவதும் வேதனை, பலக்குறைவு, மயக்கம், மூச்சுத் திணறல் ஆகியவை தீரும். 45, 90, 135 நாட்கள் சாப்பிட வேண்டும்.

3. ஆவாரம் பட்டை, கஸ்தூரி மஞ்சள், ஒரு மிளகாய், சிறிது சாம்பிராணி, நல்லெண்ணெயுடன் (ஆவாரைத் தைலம்) காய்ச்சி, தலை முழுகி வர மதுமேகம் உடையவருக்குக் காணும் தோல் வெடிப்பு, வறட்சி, எரிச்சல் குணமாகும்.

4. 20 கிராம் பட்டையைப் பொடித்து ஒரு லிட்டர் நீரில் இட்டு 200 மி.லி. யாகக் காய்ச்சி 50 மி.லி. காலை, மாலை குடித்து வர மதுமேகம், சிறுநீருடன் இரத்தம் கலந்து போதல், பெரும்பாடு, தாகம் ஆகியவை தீரும்.
G.JK Media Works Health Team 2011

Ingen kommentarer:

Legg inn en kommentar