6.4.12

மஞ்சளின் மருத்துவக் குணங்கள்


மஞ்சள் நமது வாழ்வினூடே பல முறைகளில் கலந்துவிட்ட ஒன்று. உணவுக்கு மணமூட்டவும், கிருமி நாசினியாகவும், மருந்துகள் தயாரிக்கவும், அழகு சாதனப் பொருள் தயாரிக்கவும் பயன்படுகிறது. பொருளாதாரம், மருத்துவம், தொழில், ஆன்மீகம் என எல்லாத் துறையிலும் மஞ்சள் பெரும்பங்கு வகிக்கிறது. மஞ்சளின் தாயகம் இந்தியா. உலகிலேயே இங்குதான் அதிக அளவில் பயிரடப்படுகிறது. கறி மஞ்சள், ந¡க மஞ்சள், காஞ்சிர மஞ்சள் என்று பல வகை இருந்தாலும் குச்சி மஞ்சள், குண்டு மஞ்சள் இருண்டுமே அதிகம் பயன்படுகிறது. குச்சி மஞ்சள் சமையலுக்கும், எண்ணெய் எடுக்கவும் மருத்துவத்திலும் பயன்படுகிறது. குண்டு மஞ்சள் பெண்கள் முகத்தில் பூசவும், அழகு சாதனப் பொருள் தயாரிக்கவும் பயன்படுகிறது மஞ்சளுக்கு பிரபஞ்சத்திலுள்ள நுண்ணிய கதிர்களை கவரும் ஆற்றல் உண்டு. எனவே சக்தியுள்ள இயற்கைப் பொருளாக இது திகழ்கிறது. தாவர இயலில் மஞ்சள் "குர்குமா லாங்கா" என குறிப்பிடப்படுகிறது. தமிழில் மஞ்சளைக் குறிக்கும் பெயர்கள் நூற்றுக்கு மேல் உள்ளன. அரிகம், அரன்மசி, உத்தரம், உரோசிதம், கதம்பம், சிறுகன், அரித்திரம், அம்பரம், கசர்ப்பம், காதரி, தீரம், தாமி, குருந்தம், அதிசக்தி, உருத்திரம், கதுப்பு என்பவை சில. மருத்துவக் குணங்கள் மஞ்சள் நுண்ணியிர்களை, நோய்க்கிருமிகளை அழிக்கும். உஷ்ணத்தை ஏற்படுத்தி வாயுவை வெளிப்படுத்தும். வயிற்றுப்புழு பூச்சிகளை அழிக்கும். மூலநோயை குணப்படுத்தும். தொண்டை நோயை நீங்கும். விஷங்களை இறக்கும்.

1. அட்டை, குளவி, தேனீ போன்றவை கொட்டினால் வலி, கடுப்பு ஏற்படும். அப்போது ஒரு துண்டு மஞ்சளுடன் சிறிது வேப்பிலை சேர்த்து அரைத்துப் பூசினால் விஷம் முறியும், வலியும் தீரும்.

2. ஜலதோஷம், தும்மல், மூக்கு நீர்வடிதல் இவற்றால் தலை பாரமாக இருக்கும். தொடர்ந்து தும்மல் வரும். கண்கள் கூசும். இந்நிலையில் தணலில் மஞ்சள் பொடியை போட்டு அதிலிருந்து எழும் புகையை மெதுவாகச் சுவாசித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

3. உடலில் தேமல் ஏற்பட்டால் அரை லிட்டர் நல்லெண்ணெயில் கைப்பிடி மஞ்சள் துண்டு எடுத்து இடித்துப் போட்டு காய்த்து வடிகட்டி பூசிவந்தால் தேமல் மறையும்.

4. எதிர்பாராதவிதமாக தீக்காயம் ஏற்பட்டுவிட்டாலோ, அல்லது சுடுநீர், நீராவி ஆகியவற்றால் ஏதேனும் கொப்புளம் மற்றும் தீப்புண் ஏற்பட்டால் சிறிதளவு வெங்காயச்சாற்றை எடுத்து, மஞ்சள் பொடியைச் சேர்த்துக் குழைத்து பூசினால் தீப்புண், கொப்புளம் மாறும்.

5. உடலில் எங்காவது சொறி, படை ஏற்பட்டால், கைப்பிடி மருதாணி இலைகளோடு ஓரிரு துண்டு மஞ்சளைச் சேர்த்து அரைத்துப் பூசி வந்தால் அவை ஆறும்.

6. மஞ்சளை அரைத்து நீரில் கலந்து தெளிய வைத்து ஒரு அவுன்ஸ் குடித்தால் உடல் எரிச்சல் தீரும்.

7. சொறி, சிரங்கு, புண் இவற்றின் மேல் மஞ்சள் தூளை தேங்காய் எண்ணெயில் குழைத்துப் பூசினால் மாறும்.

8. வாயு காரணமாகவோ அல்லது பொருந்தா உணவை உண்டதாலோ ஏற்படுகிற வயிறு உப்பிசம் குணமாக சாதம் வடித்த நீரில் சிறிதளவு மஞ்சள் தூளை கலந்து குடித்தால் போதும்.

9. அளவுக்கு மீறி மதுபானம் அருந்தியதால் அல்லது கஞ்சா போன்ற லாகிரிப் பொருட்களை உபயோகித்ததால் ஏற்பட்ட மயக்கத்தைப் போக்க மஞ்சளை நெருப்பில் இட்டு அதில் எழும் புகையை சுவாசித்தால் போதும்.

10. நாள்பட்ட புண் அல்லது ஆறாத புண் இருந்தால், மஞ்சளை நீரிலிட்டு காய்ச்சி, அந்த நீரால் கழுவி வந்தால் புண் ஆறும்.

11. வீட்டைச் சுற்றி மஞ்சள் பொடியை கரைத்து நீரைத் தெளித்தால் தொற்றுநோய் கிருமிகள் பரவாது.

12. மஞ்சள் தூளுடன் நெய் சேர்த்து குழைத்து தொண்டை மேல் பூசி வர தொண்டைப்புண் குணமாகும்.

13. கோடைக்கட்டி, வியர்க்குரு, அரிப்பு இவற்றைப் போக்க சம அளவு சந்தனம், மஞ்சள் பொடி, வேப்பிலைப் பாடி சேர்த்துக் குழைத்துப் பூசினால் சரியாகும்.

14. மஞ்சள் இலை, புதினா இலை இரண்டையும் உலரவைத்து பொடியாக்கி அதோடு சிறிதளவு உப்புத்தூள் கலந்து பல் துலக்கிவர பற் மற்றும் ஈறு உறுதி பெறும், பல் நோய் வராது. G.JK Media Works Health Team 2011

Ingen kommentarer:

Legg inn en kommentar