26.1.11

உப்பு


தி
னமும் உணவில் 3 கிராம் மட்டுமே உப்பை பயன்படுத்துபவர்களுக்கு இதய நோய், வாதம் உள்ளிட்ட நோய்கள் வராது என்கிறது அமெரிக்க மருத்துவ ஆய்வு. உப்பைக் குறைத்து சாப்பிடும் நபர்களிடையே சமீபத்தில் ஆய்வு எடுத்தார்கள். அமெரிக்க சராசரியைவிட இந்தக் குழுவில் பாதிப்பு, பாதி அளவுக்குத்தான் இருந்ததாம். இந்தக் குழுவில் ஆண்டுக்கு இதய நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 1.20 இலட்சத்திலிருந்து 60 ஆயிரமாகவும், பக்கவாதம் 66 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரமாகவும், மாரடைப்பு 99 ஆயிரத்திலிருந்து 54 ஆயிரமாகவும் குறைந்துள்ளது. இதெல்லாம் உப்பை 3 கிராம் அளவு மட்டுமே பயன்படுத்தியதால் கிடைத்த பலன். இதனால் மகிழ்ச்சியடைந்த அமெரிக்க மருத்துவர்கள் உப்பை குறைக்கச் சொல்லி வலியுறுத்தி வருகின்றனர். வீட்டில் சமைக்கப்படும் உணவுகளில் கூட உப்பு குறைவாகவே இருக்கிறதாம். பதப்படுத்தப்பட்ட உணவுகளில்தான் 75 முதல் 80 சதவீதம் உப்பு உள்ளது என்கிறது இந்த ஆய்வு. இனி உப்பைப் பயன்படுத்துவதில் கவனமாக இருந்தால் ஆரோக்கியம் தானே தேடிவரும்.

Ingen kommentarer:

Legg inn en kommentar