24.1.11

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீம்பால்




குழந்தை பிறந்த உடனே  `சீம்பால்' என்று அழைக்கப்படும் தாய்ப்பாலை முதலில் தவறாமல் கொடுக்க வேண்டும்.அதனால் குழந்தைக்கு மட்டுமில்லாமல் தாய்க்கும் பல நன்மைகள் உண்டு.
நோய் எதிர்ப்பு சக்தியானது  பிறந்த குழந்தையின் உடலில் மிகவும் குறைவாக இருக்கும். தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகமாக உள்ளது. அந்த சீம்பாலை குழந்தைக்கு கொடுப்பதன் மூலம் அதன் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

அதனால், எந்த நோயும் எளிதில் குழந்தையை  தாக்குவது இல்லை.இதுமட்டுமல்லாமல் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாய்க்கும், குழந்தைக்கும் இடையேயான பாசப் பிணைப்பு பலப்படுகிறது. ஒரு தாய், தனது குழந்தையை அணைத்து பால் ஊட்டும்போது, தாயின் அன்பு, அரவணைப்பு, பாசம், பாதுகாப்பு அந்த குழந்தைக்கு கிடைக்கிறது.
குழந்தைகளுக்கு முதல் 6 மாதங்கள் கண்டிப்பாக தாய்ப்பால் கொடுப்பது மிகவும் நல்லது. அப்படி செய்வது அவசியமும் கூட, ஏனெனில் தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளுக்கு வயிறு மற்றும் குடல் உபாதைகள் வராமல் தடுக்கும். தாய்ப்பாலானது குழந்தையின் ஜீரணத்திற்கு சுலபமானது மற்றும் மலச்சிக்கல் ஏற்படுத்தாது.
தாய்ப்பால் பிறந்த குழந்தைகளுக்கு ஆஸ்துமா மற்றும் காது சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாவதைத் தடுக்கும். ஏனெனில் தாய்ப்பாலானது மூக்கு மற்றும் தொண்டைப் பகுதியில் உள்சுவரில் நடு பாதுகாப்பு படலத்தை ஏற்படுத்துகிறது.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதினால் பால் கொடுக்கும் தாய்க்கு மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு எனவும் நம்பப்படுகிறது.
தாயின் அன்பானது குழந்தையின் நல்ல மன வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைகிறது. தாயின் அன்பு,பாசம் கிடைக்காத குழந்தைகள் சமூக விரோதிகளாக மாறி விடுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன என்று ஆராய்ச்சியாளர்களே நிரூபித்து இருக்கிறார்கள். அதனால், எந்த தாயும் தங்கள் குழந்தைக்கு தாய்ப்பாலை கொடுக்க மறக்க வேண்டாம்.

Ingen kommentarer:

Legg inn en kommentar