23.1.11

மீன் எண்ணெய்


ர்ப்பிணிகள் மீன் எண்ணெய் சாப்பிடுவதால் குறைப் பிரசவ பிரச்னை இருக்காது என்பது ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.அதே நேரம், கர்ப்பிணிகள் பிரசவத்துக்குப்  பிறகு விடுபடவோ, குழந்தையின் மூளை வளர்ச்சிக்கோ மீன் எண்ணெய் உதவாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கர்ப்பிணிகளுக்கு மீன் எண்ணெய் கொடுப்பதால்  ஏற்படும் பயன் குறித்து ஆராய்ந்தனர்.

2,000 கர்ப்பிணிகளைத் தேர்ந்தெடுத்து குழந்தையின் மூளை வளரும் காலமான 5 முதல் 9 மாதங்கள் வரை ஒரு பிரிவினருக்கு மீன் எண்ணெய் மாத்திரையும், மற்றொரு  பிரிவினருக்கு காய்கறி எண்ணெய் அடங்கிய மாத்திரையையும் கொடுத்து வந்தனர்.பின்னர் ஆய்வு செய்ததில் பிரசவ காலத்தில் ஏற்படும் சில பிரச்னைகளுக்கு மீன்  எண்ணெய் தீர்வாக இருப்பது ஆய்வில் தெரிய வந்தது.

குறிப்பாக, மீன் எண்ணெய் சாப்பிட்ட கர்ப்பிணிகளுக்கு குறைப் பிரசவம் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருந்தது. பொதுவாக 40 வாரங்களுக்குப் பிறகு குழந்தை பிறப்பது வழக்கம்.மீன் எண்ணெய் சாப்பிடுவதன் முதல் 34 வாரங்களுக்கு முன்பு பிரசவம் ஏற்படுவதைத் தடுக்க முடியும் என்பது தெரிய வந்துள்ளது.

மீன் எண்ணெய் மாத்திரையில் மூளை வளர்ச்சிக்குத் தேவையான டி.எச்.ஏ. 800 மில்லி கிராம் மற்றும் 100 மில்லி கிராம் ஒமேகா-3 அமிலம் ஆகியவை உள்ளதைக் க ண்டறிந்தனர்.

எனினும், மீன் எண்ணெய் மாத்திரை வழங்கிய கர்ப்பிணிகளுக்குப் பிறந்த குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் பெரிய மாற்றம் எதுவும் நிகழவில்லை. மேலும் பிரசவத் துக்குப் பிந்தைய மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கும் இது பயன்படவில்லை என்பது தெரியவந்தது. தவிர, இதை சாப்பிடுவதால் வாந்தி வருவதற்கான வாய்ப்பும்  அதிகம். இவ்வாறு ஆய்வில் தெரிவித்தனர்.

-ம. ஸ்ரீவித்யா.

Ingen kommentarer:

Legg inn en kommentar