23.1.11

கீரை (1)


கீரை
தூதுவளைக்கீரை
இது தூதுவேளைக்கீரை எனவும் வழங்கப் பெறும். வடலூர் வள்ளலார் இக்கீரையை ஞான சாதன மூலிகை என்று புகழ்ந்துரைக்கிறார்.நாம் ஞானத்தைப் பெறுவதற்கு  இம்மூலிகை சிறந்த வழிகாட்டியாக இருக்கும். உடம்பை அழியாமல் வைத்திருக்கத் திருமூலர் இந்தத் தூதுவளையைத்தான் உபதேசிக்கிறார்.இனம் தெரியாத  நோய்களுக்கும் கூட இந்தக்கீரை,எமதர்மனாக விளங்கும்.அவை களையெல்லாம் தீர்த்துக் கட்டிவிட்டுத்தான் மறுவேலை பார்க்கும்.

தூதுவளைக்கீரை சூடு நிறைந்தது.கொஞ்சம் கசப்புச் சுவை உடையது. இது வாத, கப நோய்களை நீக்கி உடலை உறுதிப்படுத்தும். தூதுவளைக் கீரையில் நிறைய முள் இருக்கும்.இதனைப் பறித்து வந்து நன்றாக ஆய்ந்து நெய் விட்டு வதக்கித் துவையலாகச் செய்து சாப்பிட வேண்டும். அல்லது இதை வதக்கிக் கஷாயம் தயாரித்துச்  சாப்பிடலாம்.

தூதுவளைக்கீரை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்:
1) இக்கீரை தாதுவை வளமாக்கக்கூடியது. போக இச்சை பெருகும்.

2) இக்கீரையை உண்டு வந்தால் நல்ல நினைவாற்றல் பெருகுவதுடன் அறிவுக் கூர்மையும் உண்டாகும்.

3) நீரிழிவு நோயைக் குறைக்கும். படிப்படியாகக் குறைத்துக்கொண்டே வந்து, நீரிழிவு நோயை முற்றிலும் போக்கிவிடும். (அறுபது நாட்கள் விடாமல் உண்ணவேண்டும்.)

4) தாது சம்பந்தப்பட்ட வியாதிகளை எளிதில் போக்குகிறது.

5) வாயுக் கோளாறால் உண்டாகும் குத்தல், குடைச்சல் ஆகியவைகளை நீக்குவதுடன் மூலரோகத்தையும் போக்கும்.

6) காசம், க்ஷயம், உடல் இளைப்பு, ஆஸ்துமா, கபம், இருமல் ஆகியவைகளைக் குணப்படுத்துகிறது.

7) விஷக்கடியைப் போக்கிவிடுகிறது.
வெந்தயக்கீரை
நீங்கள் தினசரி சாப்பிடக்கூடிய கீரைகளுள் ஒன்று வெந்தயக்கீரையாகும். தினமும் இதை உணவில் சேர்த்து வந்தால் உங்கள் உடம்பு ஆரோக்கியமாக இருக்கும். உடலில்  கோளாறுகள் இருப்பின் அவைகளை வெந்தயக்கீரை ஒரு கை பார்க்கும்.

வெந்தயக்கிரை உண்பதால் உண்டாகும் நன்மைகள்:

1) உடலிலுள்ள சொறி, சிரங்குகள் குணமாகும்.

2) கண் பார்வை தெளிவாக இருக்கும்.

3) மலச்சிக்கல், வயிற்றுளைச்சல் போகும்.

4) குமட்டல் போகும்.

5) வேக வைத்த வெந்தயக்கீரையை வெண்ணெயில் வதக்கி உண்ணப் பித்தக் கிறுகிறுப்பு, தலைச்சுற்றல், பசியின்மை, நாக்குச் சுவையின்மை, வயிற்று உப்புசம், வறட்டு இ ருமல் ஆகியவை நீங்கும்.

6) சீரணம் நன்கு அமையும்.

7) வெந்தயக்கீரையுடன் கோழி முட்டை, தேங்காய்ப் பல் சேர்த்து நெய்யில் உண்டு வர இடுப்பு வலி குணமாகும்.

8) வெந்தயக்கீரையை நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லை நீங்கும்.

9) வெந்தயச் சாறு மூன்று தேக்கரண்டியும், தேன் ஒரு தேக்கரண்டியும் சேர்த்து அருந்தி வந்தால், பித்தக் கோளாறுகளால் உண்டாகும் தலைவலி, தலைச்சுற்றல், தூக்கமி ன்மை ஆகியவை சரியாகிவிடும்.

10) இரத்த விருத்தியை உண்டாக்கும்.

- தாராபுரம் சுருணிமகன்

Ingen kommentarer:

Legg inn en kommentar