24.4.11

கண்களை பாதுகாக்கும் முருங்கைப் பூபொதுவாக காய்களையும், கனிகளையும் உட்கொள்ளும் நாம் காய், கனி உருவாவதற்கு காரணமான பூக்களை உணவில் சேர்த்துக் கொள்வதில்லை.அப்படி நாம் ஒதுக்கிவிட்ட பூக்களுக்கு பல மருத்துவக் குணங்கள் உள்ளன. முருங்கைப் பூவைப் பயன்படுத்தினால் கண்கள் குளிர்ச்சி பெறும். உடல் உறுப்புகள் சீரான முறையில் வளர்ச்சியடையும். அதிகமான பித்தத்தை போக்கும்.
வாழைப் பூ கை, கால் எரிச்சல், இருமல், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் போன்றவற்றை நிவர்த்தி செய்யும்.
மாதுளம் பூ பித்த வாந்தியை நிறுத்தும் தன்மை கொண்டது. இரத்த மூலம், உடல் வெப்பம் ஆகியவற்றைச் சீர் செய்யும். இது தவிர மாதுளம் பழத்தோல் சீதபேதி, வாய்ப்புண், இரத்த பேதி போன்றவற்றிற்கு மருந்தாகும்.
அகத்திப் பூ வெயில் காரணமாக ஏற்படும் பித்தத்தை அகற்றும். உடல் அழற்சியை விலக்கும். வேப்பம் பூ நீடித்த ஏப்பம், வாந்தி, குடற்பூச்சிகள் ஆகியவற்றை அகற்றும்.
புளியம் பூவைச் சமையலுக்குப் பயன்படுத்தினால் பித்தம் அகலும். நாவின் சுவையின்மை நீங்கும். வெங்காயப் பூ குன்ம நோய்களை போக்கும் மற்றும் குடல் தொடர்பான பல பிணிகளை நீக்கும்.
G.JK Media Works Health Team 2011

Ingen kommentarer:

Legg inn en kommentar