12.6.11

பார்லி அரிசி

ட்டச்சத்து மிகுந்த பார்லி, உடல் வலிமைக்குப் பெரிதும் உதவுகிறது. சிறுநீர்ப் பையில் அழற்சி ஏற்பட்டால்,பார்லி அரிசியில் கஞ்சி அரை லிட்டர் எடுத்துக்கொண்டு, அத்துடன் கருவேலம் பிசினையும் (1 அவுன்ஸ்) கலந்து உட்கொண்டு வந்தால் குணம் தெரியும்.
பார்லி அரிசியின் மாவுப் பகுதியில் நீரில் கரையக் கூடியதும், பிசுபிசுப்புத் தன்மை உடையதுமான ‘டெக்ஸ்ட்ரின்’என்னும் சத்துப் பொருளும், சர்க்கரையும் அடங்கியுள்ளன. கஞ்சி தயார் செய்ய, பார்லி அரிசியைக் கொதிக்க வைக்கும்போது, இந்தச் சத்துக்கள் கரைந்து, ஊட்டச்சத்தாக மாறிவிடுகின்றன.

பார்லி அரிசி ஒரு அவுன்ஸ் எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டுக் காய்ச்சுங்கள்! தண்ணீர் பாதியாகச் சுண்டியவுடன், அந்தக் கஞ்சியுடன் சிறிது எலுமிச்சம் பழச்சாறும்,சர்க்கரையும் சேர்த்துச் சாப்பிட்டால் நோயின் காரணமாக ஏற்பட்ட பலவீனத்தைத் தரும். உடல் உறுப்புகளில் ஏற்பட்ட அழற்சியையும் குணமாக்கும்.

கெட்ட கொலஸ்ட்ராலைப் (எல்டிஎல்) போக்கி, நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்வதில் பார்லி அரிசி சிறந்து விளங்குகிறது. பார்லியில் உள்ள பீட்டோ குளுக்கான் என்ற நார்ச்சத்து முக்கியப் பங்கு வகிக்கிறது.

பார்லியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. பார்லியில் உள்ள வைட்டமின் பி, நரம்புகளைப் பலப்படுத்தும். தினமும் ஒரு வேளை பார்லி அரிசிக்கஞ்சி அருந்தினால் கொலஸ்ட்ரால் கணிசமாகக் குறையும்.

கோதுமையிலும், ஓட்ஸிலும் நார்ச்சத்து இருந்தபோதிலும், ‘ப்ராஸஸ்’ செய்யப்படும்போது,அவைகளிடத்திலிருக்கும் நார்ச்சத்து ஓரளவு குறைந்து போகின்றன. ஆனால் பார்லியில் ‘பீட்டோ குளுக்கான்’ என்ற நார்ச்சத்து எந்த வகையான தயாரிப்பு முறையிலும் அழிவதில்லை.இதுதான் பார்லியின் சிறப்புக் காரணம்.இது உடம்பில் இருக்கிற சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.பார்லியில் இருக்கும் நார்ச்சத்து சக்திமிக்கது. எனவே, பார்லி கஞ்சியை சாப்பிட்டு பல நன்மைகளைப் பெறுவோமாக!

- தாராபுரம் சுருணிமகன்
G.JK Media Works Health Team 2011

Ingen kommentarer:

Legg inn en kommentar