11.12.11

தினமும் முட்டை சாப்பிட்டால் உடல் எடை குறையும்: புதிய ஆய்வில் தகவல்

லண்டன், டிச.11-
 
முட்டை சாப்பிட்டால் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு சத்து அதிகரிக்கும் என்ற கருத்து பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆனால் உடல் எடையை குறைக்க முட்டை ஒரு சிறந்த மருந்தாக திகழ்கிறது என ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
 
இங்கிலாந்தில் உள்ள சர்தே பல்கலைக்கழக நிபுணர்கள் சமீபத்தில் ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டனர். அதில் காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் உணவு சாப்பிடும்போது ஒரு முட்டை எடுத்துக் கொண்டால் போதும். தானாக உடல் எடை குறைந்து விடும் என கண்டறிந்துள்ளனர்.  
 
ஏனெனில் முட்டை சாப்பிடும்போது முழு உணவு உட்கொண்ட திருப்தி ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து நொறுக்கு தீனிவகைகள், பிஸ்கட், கேக் மற்றும் சாக்லேட்டுகளை சாப்பிடும் எண்ணம் வராது. அதனால் உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பு குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதே கருத்தைதான் பேராசிரியர் புரூஷ் கிரிப்பினும் கூறியுள்ளார். எனவே உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி கூடங்களுக்கு அலைந்து திரிய வேண்டாம். சாப்பாட்டின் போது தினமும் ஒரு முட்டை சாப்பிட்டாலே போதும்.
G.JK Media Works Health Team 2011

Ingen kommentarer:

Legg inn en kommentar