4.2.12

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளின் நுரையீரல் பலமாக இருக்கும்

லண்டன், பிப். 4-
 
 
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளின் உடல்நலம் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளின் நுரையீரல் மிகவும் பலம் வாய்ந்ததாக இருக்கும் என தெரிய வந்தது. இதனால் அந்த குழந்தைகளுக்கு ஆஸ்துமா போன்ற நுரையீரல் நோய் வராது.
 
ஆஸ்துமா நோய் பாதித்த பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கக்கூடாது. அதன் மூலம் குழந்தைக்கும் அந்த நோய் பரவும் என்று முந்தைய ஆய்வில் கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போதைய ஆய்வின்படி ஆஸ்துமா நோய் தாக்கி இருந்தாலும் பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கலாம். அதன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோயின் தாக்கம் குறையும் என்றும் விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
G.JK Media Works Health Team 2011

Ingen kommentarer:

Legg inn en kommentar