18.3.12

சிறுநீரக கோளாறுகளுக்கு மருந்தாகும் துளசி

துளசியின் மருத்துவ குணங்கள் ஏராளம். இதற்கு ஆன்மீக மகத்துவமும் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடி தான்.
அவரவர் வசதிக்கேற்ப சிறிய தொட்டியில் கூட துளசி செடியை வளர்த்து வரலாம். ஆனால் அதனை கவனமாக பராமரிப்பது அவசியம். எளிதாகக் கிடைக்கும் துளசியில் மகத்துவங்கள் ஏராளம்.
துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம்.
நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நாடாது.
உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும்.
தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும். துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொரி மறையும்.
சிறுநீர் கோளாறு உடையவர்கள், துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.
மருத்துவக் குணங்கள்
சளி, இருமல், வறட்டு இருமல் போன்றவற்றுக்கும் மருந்தாகும்.
தொற்றுநோய்களை எதிர்க்கும்.
சீரண சக்தியை அதிகரித்து பசியை அதிகரிக்கும்.
வயிற்றுப் பொருமலைத் தணிக்கும்.
துளசிவிதை ஆண்மையை அதிகரிக்கும்.
ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
வெண்தோல், ஆஸ்துமா, மூச்சிறைப்பு, இடுப்புப்பிடிப்பு, சிறுநீரகப் பிரச்சினைகள் போன்றவற்றுக்கும் மருந்தாகும்.
G.JK Media Works Health Team 2011

Ingen kommentarer:

Legg inn en kommentar