2.4.12

இரத்தசோகைக்கு நிவாரணம் அளிக்கும் இரும்புச் சத்து


நாலாவது பிரசவத்தை எதிர்நோக்கியிருந்த நடுவயது தாயொருவர் கருத்தரித்தவுடன் பதறியடித்தபடி என்னிடம் வந்தார். டாக்டர் எனக்கு இந்தக் குழந்தை வேண்டாம். நான் பலவீனமாக இருக்கிறேன் என்றார். அவரைப் பார்த்த போது திடகாத்திரமானவராக இருந்தார்.
எனினும் நாக்கு, கண்ணிமையில் உ ட்பகுதி என்பன வெளிறியிருந்தன. அவர் கூறியது போல அவர் பலவீனமாக இருந்தார். அவருக்கு இரத்த சோகை இருப்பதை தெரிந்து கொண்டேன். இலங்கையில் கருச் சிதைவு இன்னமும் அங்கீகரிக்கப்படவில்லை என்பதை  அவரிடம் கூறியதுடன் அவருக்கு இரத்த சோகை இருப்பது பற்றியும் கூறினேன். இனி குழந்தையை சுகமாக பெற்றெடுப்பது பற்றி  ஆலோசனை கூறினேன்.
இரத்த சோகை (Anaemia) இரும்பு சத்து குறைப்பாடாலேயே பிரதானமாக ஏற்படுகிறது. இரத்தத்திலுள்ள செங்குருதிக் கலங்களில் ஈமோகுளோபின் (Ha-emoglobin) இருக்கிறது. இதுவே  எமது உடலின் உறுப்புகளுக்கு பிராண வாயுவான ஒட்சிசனைக் காவிச் செல்வது ஒட்சிசன் (Oxygen) இன்றி காபோவைரேற் உணவுக் கூறிலிருந்து சக்தியைப் பெற முடியாது. இதனாலேயே  இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் களைத்து மூச்சு வாங்குகிறார்கள். எமது உடலிற்குத் தேவைப்படும். தாதுப் பொருட்களில் இரும்புச் சத்து முக்கியமானது. பச்சை கீரை வகைகளில் இரும்புச் சத்து போதியளவு இருக்கின்றது. முட்டை, மாமிசம் என்பவற்றிலும் உண்டு. எமது உணவில் இவற்றைச் சேர்ப்பதன் மூலம் இரத்த சோகை ஏற்படுவதை தவிர்க்கலாம். இரத்த சோகையைக் குணமாக்கவும் இவை உ தவும்.
என்னிடம் வந்த தாயாரின் இரத்தத்தைப் பரிசோதித்த போது ஈமோகுளோபினின் அளவு   9 கிராமாக இருந்தது. இதன் அளவு 11.5 ற்கு குறைவாக  இருப்பின் இரத்த சோகையாகும். இரத்த சோகை நிவர்த்திக்காப்படாதுவிட்டால் குழந்தையின் வளர்ச்சி பாதிப்படைவதுடன் பிரசவத்தின் போது ஏற்படும் இரத்த இழப்பையும் ஈடு செய்ய முடியாதிருக்கும். எனவே பெண்கள் தாம் கருத்தரிக்க முன்னர் இரத்த சோகை இருப்பின் அதைச் சீர்செய்வது அவசியம். இரத்த சோகையுடன்  கருத்தரித்தவர்கள் காலதாமதமின்றி இரத்த சோகையை குணப்படுத்திட வேண்டும்.

இரும்புச் சத்து வில்லைகளுடன் போலிக் அமிலம், ஆ 12  அடங்கிய  மல்றி விட்டமின் வைத்திய ஆலோசனைப்படி உட் கொள்ள வேண்டும். என்பவற்றை G.JK Media Works Health Team 2011

Ingen kommentarer:

Legg inn en kommentar