8.4.12

முருங்கைக்கீரை !

கீரை சமைப்பது எப்படி?

கீரையை பச்சைப் பசேல் என்று அதன் நிறத்திலேயே சமைப்பதுதான் சாலச் சிறந்தது. கீரையைக் கழுவியபின் ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி சிறிது சர்க்கரையைச் சேர்த்து அதில் கீரையைப் போட்டு அரைமணி நேரம் மூடி வைத்துவிடவேண்டும். பின்பு கீரையை எடுத்து உப்பு, சீரகம் மட்டும் சேர்த்து வேகவைத்து மசித்து கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் ஆகியவற்றைத் தாளித்துச் சாப்பிடவும். பருப்பு வேகவைத்து கீரையுடன் சேர்த்து மசித்துக் கொள்ள சுவைகூடும்.

முருங்கைக்கீரை

முருங்கைக் கீரையைப் பொரியல் செய்து சாப்பிடலாம். இதில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன. மேலும் அனைத்து தாதுக்களும் சம அளவில் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும், உடல் வலிமையும்,உறுதியும் கிடைக்கும்.

முருங்கைக் கீரையை, வேர்க்கடலையுடன் சேர்த்துச் சாப்பிட கர்ப்பப்பை வலுவடையும்.

மாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்றுவலி குணமடைய, சிறிதளவு முருங்கைக்கீரையுடன் சிறிதளவு சீரகம் சேர்த்து இடித்து ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் காலத்தில் ஐந்து நாட்கள் சாப்பிடவேண்டும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி குணமாகும்.

முருங்கைக் கீரை சாப்பிட்டால் பெறும் பயன்கள்:

1. தாதுபலம் பெருகும்

2. ரத்த அழுத்த நோய் குணமாகும்

3. கொழுப்புச் சத்து குறையும்

4. நீரிழிவு நோய் குணமாகும்

5. சர்க்கரை நோய் குறையும்

6. காமாலை குறையும்

7. கண்பார்வை தெளிவாகும்

குறிப்பு: மூட்டு வலி உள்ளவர்கள் முருங்கைக்கீரையை சேர்க்கக்கூடாது. G.JK Media Works Health Team 2011

Ingen kommentarer:

Legg inn en kommentar