8.4.12

மூட்டு வலியை நீக்கும் முடக்கத்தான்:

* மூட்டு வாதமா? முடக்கற்றான் கீரையை சாப்பிடுங்கள். இது பலருக்கு தெரிந்த மூட்டு வாத அறிவுரை.  பெயருக்கேற்ற செயல்பாடு உடையது முடக்கற்றான் (முடக்கு + அறுத்தான்) பழங்காலத்திலிருந்து  மூட்டுவலி, மூட்டு பாதிப்புகளுக்கு கைமருந்தாக பயன்பட்டு வருகிறது.

* சித்த வைத்தியத்திலும் உபயோகிக்கப்படுகிறது. இந்த முடக்கற்றான் மூலிகை வாயு பகவானின்  மூலிகை எனப்படுகிறது. இதனால் வாய்வு தொல்லைகளுக்கு அருமருந்தாகும்.

* செடியின் வேர், இலை செடி முழுவதும் மருத்துவ பயன்களுடையவை.மூட்டுவாதம், மூட்டுவலி  (ஆர்த்தரைடீஸ், ருமாடிஸம்) இவற்றுக்கு முடக்கற்றான் மூலிகையின் முக்கிய பயன்,  நோயால்  முடங்கிப்போன முட்டிகளை மீண்டும் இயங்க வைக்கும்.

* கீல் பிடிப்பு, கீல் வாதம், கால்களை நீட்டவோ, மடக்கவோ முடியாமல் போதல், நடக்க முடியாமல்  போதல், இவற்றுக்கெல்லாம் முடக்கற்றான் கீரையை சமைத்து சாப்பிட்டுவர நல்ல குணம் தெரியும்.

* இதன் இலைகளை அரைத்து, பூண்டு, சீரகம், கருமிளகு, உப்பு, வெங்காயம் இவற்றை சேர்த்து, ரசம்  போல் தயாரித்து, ஒரு நாளைக்கு 2 வேளை குடிக்க, ருமாடிஸம், சுளுக்கு, மலச்சிக்கல் இவை மறையும்.

* இலைகளை நெய்யில் வதக்கி, கூட இஞ்சி, கொத்தமல்லி, உளுத்தம் பருப்பு, பெருங்காயம்,  கறிவேப்பிலை சேர்த்து சட்னி போல அல்லது துவையல் போல தினமும் சாப்பிட்டு வர மூட்டு நோய்கள்  தீரும்.

* இதர கீரைகளை சமைப்பது போலவே முடக்கற்றான் கீரையை சாப்பிட்டு வரலாம். இலை, வேர்  இவற்றை சம பாகமாக எடுத்து, இஞ்சி, மிளகு, சீரகம், தண்ணீர் சேர்த்து, கஷாயமாக, காய்ச்சி, அந்த  எண்ணையை வலியுள்ள இடங்களில் பூசலாம். இதற்கு நல்லெண்ணையை பயன்படுத்தலாம்.

* இந்த மூலிகை செறிந்த எண்ணைப்பூச்சு, கீல்வாத வலிகளை போக்கும். வாத வீக்கங்களுக்கு,  முடக்கற்றான் தண்டு, இலைகளை, பாலுடன் அரைத்து தடவ, வீக்கங்கள் குறையும்.

* முடக்கற்றானை உபயோகிப்பதால் கால்களின் ஏறி வரும் விறைப்புத் தன்மை (அதுவும் காலை  நேரங்களில் ஏற்படும்) போகும். உடல் வலிகளுக்கு, இலைகளை கடலை எண்ணையில் அரைத்து,  வெளிப்பூச்சாக வலிக்கும் இடங்களில் தடவலாம்.

ஒரே இலையில் இத்தனை பயன்களா என்று வியப்பாக இருக்கிறதா, வியப்பதோடு நிறுத்தி விடாதீர்கள் அதன் பயனை அனுபவியுங்கள்.
G.JK Media Works Health Team 2011

Ingen kommentarer:

Legg inn en kommentar