9.4.12

உறவுகொள்ள பாதுகாப்பான நாட்கள் எவை?

dr_m_K_murgananthan_
உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான பெண்கள் தமது மாதவிடாய் சக்கரத்தில் பாதுகாப்பான நாட்களில் மாத்திரமே உடலுறவு கொள்வதன் மூலம் கர்ப்பம் தங்காமல் தவிக்கிறார்கள். சில நாடுகளில் நான்கு பெண்களுக்கு ஒருவர் என்ற சராசரி அளவில் பெண்கள் இம் முறையை பயன்படுத்துகின்றார்கள்.
சரியான முறையில் இதனைக் கடைப்பிடித்தால் அது 75 முதல் 90 % வரையில் வெற்றி அளிக்கக் கூடியது. இதில் முக்கியமான விடயம் என்னவெனில் விஞ்ஞான பூர்வமாக சரியான நாட்களைத் தேர்ந்தெடுப்பதுதான். அது மிகவும் சிக்கலானது என்பதே பிரச்சினை.
மாதவிடாய்ச் சக்கரம்
சரியான நாட்களைத் தேர்ந்தெடுப்பதற்கு மாதவிடாய்ச் சக்கரம் என்றால் என்ன என்பதை முதலில் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
மாதவிடாய் சக்கரத்தில் பெண்ணின் சூலகத்திலிருந்து (ovary) முட்டை (egg) வெளியாகி பலோப்பியன் குழாய் (fallopian tube) வழியாக பயணம் செய்து கர்ப்பப்பையை அடையும். சூலகம் என்று கூறிய ovaryயை கருவகம் என்றும் சொல்வதும் உண்டு.
இம்முட்டையானது 24 மணி நேரம் மட்டுமே உயிர்வாழக் கூடியது. எனவே கர்ப்பம் தரிக்க வேண்டுமானால் அந்த 24 மணிநேர கால அவகாசத்திற்குள் ஆணிலிருந்து வெளியாகும் விந்தணுவை சந்தித்தாக வேண்டும்.
இதன் அர்த்தம் அந்த 24 மணி நேர காலத்திற்குள் உறவு கொண்டால் மட்டுமே கரு முட்டை தங்கும் என்பதல்ல.
ஆணின் விந்தணுவானது உறவின் போது வெளியேறி பெண்ணின் கர்ப்பப்பையூடாக பலோப்பியன் குழாயைச் சென்றடைந்த பின்னர் பல நாட்களுக்கு உயிரோடு இருக்கக் கூடியதாகும். அது அவ்வாறு காத்திருக்கும் காலத்திற்குள் முட்டை வெளியேறினால் கருக்கட்டல் நடைபெறும்.

பாதுகாப்பான நாட்களைக் கண்டறிவது எப்படி?
எனவே பாதுகாப்பான நாட்களைக் கண்டறிவது எப்படி? ஏனெனில் சூலகத்திலிருந்து முட்டை வெளியேறும் சரியான தினத்தை முற்கூட்டியே அறிவது சிரமம். இருந்த போதும் பெரும்பாலான பெண்களில் இது அடுத்த மாதவிடாய் வருவதற்கு 14 முதல் 16 வரை முன்னராகும்.
பொதுவான மாதவிடாய் சக்கரம் என்பது 28 நாட்களாகும். இதுவே பெரும்பாலான பெண்களுக்கு பொருந்தும். ஆனால் பலருக்கு இதற்குக் குறைவான அல்லது கூடிய நாள் இடைவெளிகளில் மாதவிடாய் வருவதுண்டு.
உங்களது மாதவிடாய் சக்கரம் 35 நாட்கள் நீண்டது என்றால் உங்கள் சுழற்சியில் 14 ஆம் நாளன்று கருத்தரிக்க வாய்ப்பில்லை. நீங்கள் 15 நாட்கள் சுமார் 28 முதல் வரை அவதானமாக இருக்க வேண்டும்.
மாறாக உங்களது மாதவிடாய் சக்கரம் 23 நாட்கள் என்றால் முட்டையானது 7  9 ஆவது தினத்தில் வெளியேறும். எனவே அத்தகையவர்களுக்கு 15 நாட்களுக்கு பின்னர் பாதுகாப்பான நாட்களாக இருக்கலாம்.
தவறாக கணக்கிட வேண்டாம்
உங்களுக்கு மாதவிடாய் வெளியேற ஆரம்பிக்கின்ற நாளை சக்கரத்தின் முதல் நாளாகக் கொள்ள வேண்டும். அடுத்த மாதம் மாதவிடாய் வந்த நாளுக்கு முந்திய நாள் சக்கரத்தின் கடைசி நாளாகும். பொதுவாக இச்சக்கரம் 28 நாட்களாக இருக்க வேண்டும்.
சில பெண்கள் மாதவிடாய் படுவது நின்ற தினத்தை சக்கரத்தின் முதல் நாள் என நினைப்பதை நான் கண்டிருக்கிறேன். அதாவது நான்கு நாட்களுக்கு இரத்தப் போக்கு இருந்தால் அது நின்ற ஐந்தாவது நாளையே முதல் நாள் என எண்ணுகிறார்கள். இது தவறானது. மாதவிடாய் வெளியேற ஆரம்பிக்கின்ற ஆரம்ப நாள்தான் சக்கரத்தின் முதல் நாளாகும்.
ஆனால் எல்லாப் பெண்களினதும் மாதவிடாய் சக்கரம் ஒழுங்காக இருப்பதில்லை. கடந்த ஒரு வருட காலத்தில் அது ஒழுங்காக 28 நாள் சக்கரமாக இருந்திருந்தால் இம்முறையை நீங்கள் பயன்படுத்தலாம். முக்கியமாக கடந்த ஒரு வருட காலத்தில் இச்சக்கரமானது 26 முதல் 32 நாட்கள் என்ற வரையறைக்குள் இருந்தால் இம்முறையைப் பயன்படுத்தலாம். இவர்களுக்கு தமது மாதவிடாய் சக்கரத்தில் 8 முதல் 19 நாள் வரையான நாட்கள் கருத்தங்கக் கூடிய நாட்களாகும். இவர்கள் தமது சக்கரத்தின் முதல் 7  நாட்களிலும் பின்னர் 23 ஆம் நாளுக்கு பின்னரும் பயமின்றி உறவு கொள்ளலாம். 8 முதல் 23 வரையான நாட்களில் உடலுறவு கொள்வதாயின் ஆணுறையை அணிந்து கொண்டு உறவு கொள்ளலாம். எவ்வாறாயினும் இது பூரண பாதுகாப்பான முறை என்று சொல்ல முடியாது.
ஒழுங்காக மாதவிடாய் வருகின்ற பெண்களில் கூட சிலருக்கு சில அசாதாரண சூழல்களின் போது காலம் முந்தியோ பிந்தியோ ஏற்படலாம், எனவே நிச்சயமாக கருத் தங்கக் கூடாது என கருதுபவர்கள் வேறு ஒரு முறையை கடைப்பிடிப்பதே பாதுகாப்பானதாகும்.
(TK) G.JK MEDIA WORKS NEWS TEAM 2012
G.JK Media Works Health Team 2011

Ingen kommentarer:

Legg inn en kommentar