1.5.12

தளதள தக்காளி

தளதள மேனி தருவது தக்காளி சாறு. நீர்ச்சத்து நிறைந்தது. எல்லா இடங்களிலும் எல்லா காலங்களிலும் கிடைக்கும். குளிர்ச்சியானது. பலர் இதைப் பச்சையாக சாப்பிட விரும்பிவார்கள். மலிவானது. சத்து நிறைந்தது..இதனை அனைவரும் வங்கி உண்ண முடியும் .

தக்காளியை  பார்த்தாலே சாப்பிட தோன்றும். நிறமும் அழகும் ஈர்க்க கூடியது . தக்காளியைப் பொதுவாக, சமைக்காமல் பச்சையாகச் சாப்பிடுவதால் இதன் முழுப்பலனையும் பெற முடிகிறது. அப்படிச் சாப்பிடுவது உடலுக்குப் பலம் தருகிறது. இன்னும் சொல்லப்போனால், உடல் பலவீனமாக இருக்கிறவர்களுக்கு அது டானிக் போன்றது.

இதில் வைட்டமின் ஏ- சுமார் 91 மில்லி கிராம் உள்ளது. தவிர வைட்டமின் பி-1, பி-2, 17 மில்லி கிராமும், வைட்டமின் சி- 9 மில்லி கிராமும், சுண்ணாம்புச்சத்து 2 மில்லி கிராமும் கொண்டது

 நமது உடலில் ரத்த உற்பத்திக்குப் பயன்படுவதோடு மட்டுமின்றி, ரத்தத்தைச் சுத்திகாரிப்பதற்கும், சீரான ரத்த ஓட்டத்திற்கும் இது பயன்படுகிறது.
தக்காளியை எந்த விதத்தில் சாப்பிட்டாலும் அதன் சத்துக்கள் அனைத்தும் குறையாமல் நமக்குக் கிடைக்கும்.

குறிப்பாக இதை காலையிலும், மாலையிலும் சூப் செய்து சாப்பிட்டு வந்தால் தோல் நோய்கள் வராது என்பதை விட, தோலைப் பளபளப்பாக வைத்திருக்கும் தன்மை இதற்கு உண்டு.G.JK Media Works Health Team 2011

Ingen kommentarer:

Legg inn en kommentar