30.6.12

சிறந்த மணவாழ்க்கைக்கு சிறப்பான "டிப்ஸ்"


திருமணம் என்பதை "ஆயிரம் காலத்து பயிர்" என்பார்கள், காரணம் தலைமுறை தலைமுறையாய் சொந்த பந்தங்கள்  சேர்ந்து வாழவேண்டும் என்பதற்காகத்தான். மேலும் "மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்" என்ற  பழமொழியும் உண்டு. இந்த வரத்தை கடைசி வரைக்கும் காப்பற்றுவதற்கும் ஆண்களுக்கு பொறுப்பும் உண்டு.
ஆனால் சில திருமணங்கள், காதல் திருமணமோ அல்லது பெற்றோர் மற்றும் சொந்தங்கள் முன் நின்று நடத்திய  திருமணங்கள் கூட சில சமயத்தில் சரியான புரிதலும், அனுசரனையும், விட்டு கொடுத்தலும் இல்லாத காரணத்தால்  நீதிமன்றம் வாயிலில் நிற்கின்றனர்.
பிரச்சினைகள் பெரும்பாலும் ஆண்கள் வழியாகவே வருகின்றன. (ஆண்களை மட்டும் குறை சொல்லவில்லை). கணவனது  குடிப்பழக்கம், வேலையின்மை, வருமானமின்மை, கணவரின் தாய், தங்கை மற்றும் பாலியல் பிரச்சனைகள் போன்றவை  அப்பெண்ணிற்கு வெறுப்பை உருவாக்குகிறது. மேலும் திருமணத்திற்கு முன்பு கணவர்வீட்டார் கூறும் பொய்கள்தான் விவாகரத்துக்கு மிக முக்கிய காரணியாக இருக்கின்றன.
இதே‌போல, குடு‌ம்ப‌த்‌தி‌ற்கு ஒ‌த்து வராத பெ‌ண், குடு‌ம்ப சூ‌ழ்‌நிலை‌க்கு ஏ‌ற்ப மா‌ற்‌றி அமை‌த்து‌க் கொ‌ள்ளாத பெ‌ண்,  ஊதா‌‌ரி‌த் தன‌ம், பல ஆ‌ண்க‌ளி‌ன் சகவாச‌ம், குடு‌ம்ப‌த்‌தி‌ற்கு அட‌ங்காத பெ‌ண் போ‌ன்றவை ஆ‌ணி‌ன் மு‌ன் ‌நி‌ற்கு‌ம்  ‌முக்கிய காரணியாக இருக்கின்றன.
பிரச்சினைகளை சாவல்களாக்குங்கள்
பிரச்சினை எதுவாக இருந்தாலும் முதலில் கோபப்படமாலும், பதட்டபடாமலும் இருந்து இருவரும் ஒன்றே நின்று சமாளிக்க  வேண்டும். இதைதவிர்த்து அப்பிரச்சினைக்காக உங்களுக்குள்ளே (கணவன்-மனைவி) மோதிகொண்டால் பிரச்சினை  இன்னும் பெரிதாகுமே தவிர பிரச்சினை தீராது. எனவே பிரச்சினைகளை ஆரம்பத்திலயே இருவரும் மனம் விட்டு பேசி  தீர்த்தால் இல்லறம் என்றும் சந்தோஷம்தான்.
விட்டு கொடுங்கள்
இன்றைய காலக்கட்டத்தில் விட்டுகொடுத்து போவது என்பது இல்லை, இதனாலேயே பல ஜோடிகள் விவாகரத்து  கேட்கின்றனர். விட்டு கொடுங்கள், ஒருவர் கோபமாக இருக்கும் போது மற்றொருவர் அமைதியாக இருங்கள், அச்சமயம்  வார்த்தைகள் நீள்வதும் குறையும், பிரச்சினையும் குறையும். இதற்கு மாறாக இருவரும் ஒரே சமயம் கோபப்பட்டால் அது  வளர்ந்து விவாகரத்து வரைக்கும் போகும். நிதிமன்றத்தில் விவாகரத்து இன்று கேட்டவுடன் நாளை கொடுத்து விடுவதில்லை,  நிதிமன்றமும் ஜோடிகளை சேர்த்து வைக்க சில முயற்சிகளை எடுக்கும், சில பல ஆலோசனைகள் மூலமாக. ஆனால் சிலர்  விவாகரத்து வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தால் நீதிமன்றம் விவாகரத்து வழங்குகிறது.
ஆனால் வாழ்க்கையில் விட்டு கொடுத்து வாழ்வதில் இருக்கும் சந்தோஷம் வேறு எங்கும் இல்லை என்பதையும் தெரிவித்து  கொள்கிறேன்.
அன்பு / அரவணைப்பு
ஒரு நாளைக்கு ஒரு முறையாவது "I LOVE YOU" சொல்லுங்கள். தவறு செய்தால் ஒத்துக் கொள்ளுங்கள்,  அதற்க்காக மன்னிப்பும் கேளுங்கள். நடந்த தவறுகளை சுட்டி காட்டாதீர்கள். அன்புடன் விமர்சியுங்கள் மற்றும் மேலும் சில  ரொமான்ஸ்களை செய்யுங்கள்.
இல்லற சந்தோஷம் பொங்க
அன்பு, அரவணைப்பு, விட்டுக் கொடுத்தல், மனம் விட்டு பேசுதல் இவற்றை பின்பற்றி பாருங்கள். இல்லறம் என்றும் சந்தோஷம்தான். (DK) G.JK Media Works Health Team 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar