30.6.12

தூக்கம் குறைந்தால் செக்ஸ் வாழ்க்கை பாதிக்கும்


டீன்ஏஜ் இளைஞர்களுக்கு 7 மணி நேரம் தூக்கம் போதும் என்கின்றனர் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள். 5 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கினால் செக்ஸ் வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.அமெரிக்காவின் உடா மாநிலத்தில் உள்ள பிர்காம் யங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் எரிக் எய்ட் தலைமையிலான குழுவினர் தூக்கம் தொடர்பாக சமீபத்தில் ஆய்வு நடத்தினர்.

தினமும் 7 மணி நேரம் தூங்கும் டீன்ஏஜ் பருவத்தினர் கல்வி கற்பதில் சிறந்தவர்களாக உள்ளனர் என்பதை கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்கா முழுவதும் சுமார் 1,724 பள்ளி மாணவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அவர்கள் தூங்கும் நேரம், தேர்வுகளில் பெறும் மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு நடந்தது.

இதுபற்றி ஆராய்ச்சியாளர் எரிக் கூறுகையில், ‘16 வயதுள்ள ஒருவருக்கு 9 மணி நேரம் தூக்கம் அவசியம் என்று முன்பு நம்பப்பட்டது. அவர்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதும் என தற்போது தெரியவந்துள்ளது. வயது ஏற ஏற தூக்கத்தின் அளவை இன்னும் குறைக்கலாம். 10 வயது குழந்தைகள் 9 மணி நேரமும், 12 வயதினர் 8 மணிநேரமும், டீன்ஏஜ் வயதினர் 7 மணி நேரமும் தூங்குவது சரியான அளவு என்றார்.

தூக்கம் குறைவதால் ஏற்படும் பாதிப்பு பற்றி சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. எல்லாருக்கும் தூக்கம் அவசியம். நீண்ட காலமாக 5 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கினால், உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறையும். அவர்களின் அன்றாட செயல்பாடுகளில் சுணக்கம், மந்தத் தன்மை ஏற்படும்.

செக்ஸ் வாழ்க்கையும் பாதிக்கப்படும். சரியாக தூங்காத பெண்களுக்கு புற்றுநோய், குறிப்பாக மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். அதிகளவு உடற்பயிற்சி செய்தாலும் சரியாக தூங்கினால் மட்டுமே அதன் முழு பலன் கிடைக்கும் என்கிறது அந்த ஆய்வு.(DK) G.JK Media Works Health Team 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar