24.7.12

பதப்படுத்தப்பட்ட உணவுகள் பாதுகாப்பானவையா?

snacks_
இன்றைய அவசர உலகில் எதையும் வீட்டில் சமைத்து உண்ணும் பழக்கமே குறைவாக உள்ளது. அதிலும் நேரத்தைச் செலவு செய்யாமல் சேகரிக்க பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்ணுகின்றனர். அதிலும் பன்றி இறைச்சி , மாட்டிறைச்சி , இஞ்சி , பூண்டு கொண்டு செய்யப்பட்ட ஒரு சில உணவு வகைகள் மற்றும் மற்ற கெட்டுப் போகாமல் இருக்க இரசாயனம் கலந்த உணவுப் பொருட்கள் போன்றவற்றை வாங்கி சாப்பிடுகின்றனர். இவ்வாறு பதப்பட்டுத்தப்பட்ட உ ணவுப் பொருட்களை உண்பதால்  புற்று நோய் ஏற்படும். அதிலும் ஒரு நாளைக்கு 150 கிராம் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பது. 34 சிகரெட்டுகளை பிடிப்பதற்கு சமமாகும் என்று  மருத்துவர்கள் கூறுவதாக டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.
அது எப்படியென்று பார்ப்போம்.
உணவுகளானது கெட்டுப் போகாமல் இருக்க பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிகமாக இரசாயனப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதிலும் முக்கியமான நைட்ரைட் எனும் பொருள் உணவுகளை கெட்டுப் போகாமல் நீண்ட நேரம் பாதுகாத்து வைக்கின்றது. மேலும் அத்தகைய உணவுகளில் கார்சிநோஜென் எனப்படம் புற்றுநோயை உண்டாக்கும் பொருள் உள்ளது. அதுமட்டுமல்லாமல் அதிக உப்பும், கொழுப்பும் இருக்கிறது. அதன் காரணமாகவே பல நாடுகளில் புதப்படுத்தப்பட்ட  உணவுகளுக்குத் தடை விதிக்கின்றனர். ஆனால் ஒரு சில நாடுகளில் அவற்றிற்கு தடை விதிக்கவில்லை.
ஆகவே உடலானது ஆரோக்கியமாக இருக்க பதப்படுப்பத்தப்பட்ட உணவுகளை வாங்கி உண்பதை விட சுத்தமான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளால் பல வகையான புற்றுநோய்கள் வருகின்றன. அதில் அதிகமாக வரக் கூடியது கணையப் புற்றுநோய். இந்த நோய் வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக மனிதனைக் கொல்லும். இந்த நோய் வந்தால் ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது மிகவும் கடினம் . சொல்லப்போனால் சிறிதளவு பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்டாலே அந்த நோய் வரும் அபாயம் உள்ளது. அதிலும் தற்போதைய ஆய்வில் இந்த உணவு உண்பவர்களுக்கு சிகரெட் பிடிப்பவர்களை விட அதிக அளவு கணைய புற்றுநோய் ஏற்படுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு சில உணவுகள் உடலில் கொழுப்புகளைச் சேர்த்து உடல் பருமனை அதிகரித்து விடும் என்று கூறுகின்றனர். அதற்காக எந்த ஒரு பதப்படுத்தப்பட்ட உ ணவுகளையும் உண்ணக் கூடாது. அனைத்து உணவுகளும் புற்று நோயை உண்டாக்கும் என்று சொல்லவில்லை. ஒரு சிலவற்றை உண்ணலாம். ஆனால் குறைந்த அளவே உண்ண வேண்டும். ஆக÷ வ ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் சுத்தமான காய் கறி மற்றும் பழங்களை உ ண்ணலாம். மேலும் கடைகளில்  உணவுப் பொருட்களை வாங்கும் போது நல்ல தரமுள்ள உணவுகளை பதப்படுத்தாத உணவுகளை வாங்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்கி உண்ண வேண்டும் என்றால் தினமும் 50 கிராம் அளவு மட்டும் போதுமானது. ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து சுத்தமான உணவுகளை வாங்கி உண்ணுங்கள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.(நன்றி-TK) G.JK MEDIA WORKS NEWS TEAM 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar