26.1.11

தக்காளி

ழைகளின் ஆப்பிளாக விளங்கும் தக்காளியைப் பலர் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. அதிக சத்துக்களைக் கொண்ட அழகான பழம் தக்காளி. நம்முடைய உடலின் களைப்பைப் போக்கப் பழங்களைச் சாப்பிட்டுப் புத்துணர்வைப் பெறுவதைப் போலத் தக்காளிப் பழத்தையும் அப்படியே சாப்பிட வேண்டும். தக்காளியை நீங்கள் எந்த வகையில் பக்குவப்படுத்திச் சாப்பிட்டாலும் அதன் சக்தி அப்படியே நமக்குக் கிடைக்கும்.
தக்காளிப் பழத்திலுள்ள சத்துக்கள்:
வைட்டமின் கி = 91 மி.கி.

வைட்டமின் ஙி1 = 34 மி.கி.

வைட்டமின் ஙி2= 17 மி.கி.

வைட்டமின் சி = 90 மி.கி.

சுண்ணாம்புச் சத்து = 3 மி.கி.

தக்காளிப் பழத்தைச் சூப்பாக வைத்துக் காலை, மாலையில் சாப்பிட்டு வந்தால் உடல் சருமம் நல்ல ஆரோக்கியத்தைப் பெறுவது மட்டுமல்லாமல் சருமம் மென்மையாகவும், ஒருவிதப் பொலிவுடனும் இருக்கும்.

இரத்த ஓட்டம் சீராகவும், சுத்தமாகவும் இருந்தால் உடலில் நோய்த் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை. நீங்கள் தக்காளிப் பழத்தைத் தினந்தோறும் சாப்பிட்டு வந்தால், உங்கள் உடம்பில் இரத்த ஓட்டம் சீராகவும் சுத்தமாகவும் இருக்கும்.

தக்காளிப் பழத்தில், நாட்டுத்தக்காளி, ஆப்பிள் தக்காளி என்று பல வகைகள் இருந்தாலும் குணத்திலும், சத்துக்களிலும் எல்லாம் ஒன்றுதான்!
தக்காளி ரசம், உடலுக்கு உரமூட்டும். தக்காளி சட்னி, தக்காளி சூப், தக்காளி சாஸ் என்று நீங்கள் எப்படிச் சாப்பிட்டாலும் அதனுடைய சத்துக்கள் மாறுவதில்லை.

தக்காளிப் பழத்தை உண்பதால் உண்டாகும் நன்மைகள்:
1. தக்காளியில் பொட்டாசியம் நிறைந்திருப்பதால் பொலிவான முகத்துடன் விளங்கலாம்.

2. சரும வியாதிகள் வராமல் பார்த்துக் கொள்ளும்.

3. இரும்புச் சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்து நிறைந்திருப்பதால் உடல் வளர்ச்சிக்குத் தக்காளிப்பழம் உதவுகிறது.

4. களைத்துப் போன உடலுக்குப் புத்துணர்வை ஊட்டுவதில் இது முதலிடம் பெறுகிறது.

5. பற்கள் வலிமை பெறுவதற்கு இப்பழத்தின் சாறு கை கண்ட மருந்தாகும்.

6. தக்காளிக்கு இரத்தத்தைச் சுத்திகரிக்கும் ஆற்றல் உண்டு. இரத்தத்தையும் இது உற்பத்தி செய்யக்கூடியது.

7. நல்ல இரத்தத்திற்கு வழி செய்கிறது.

8. மலச்சிக்கலைப் போக்கும்.

9. முகத்தில் புத்தொளி பிறக்கும்.

10. தக்காளி குருமா, தக்காளிக் குழம்பு, தக்காளிச் சட்னிகள், தக்காளி சாதம் என்று விதம் விதமாகத் தயாரித்துச் சாப்பிடும்போது உணவில் சுவை கூடுகிறது.

Ingen kommentarer:

Legg inn en kommentar