23.1.11

வாழைப்பழம்


த்துக் குறைபாடு உள்ளவர்களுக்கு வாழைப்பழம் மிகச் சிறந்த உணவு. சுவைமிகுந்த இந்தப் பழத்தின் இன்னொரு சிறப்பு இதன் தோல் இருப்பதால், பழம் எந்த நுண் கிருமிகளாலும் பாதிக்கப்படுவதில்லை.
ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி இரண்டு வாழைப்பழம்சாப்பிட்டால் 90 நிமிடம் சுறுசுறுப்பாக வேலை செய்யத் தேவையான சக்தி கிடைக்கும். வாழைப்பழம் அதிகம் சாப்பிட்டாலும் எடை கூடுவதற்கு வாய்ப்பு இல்லை.
வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும். இதயத்துடிப்பு சமமாக இருக்க உதவும். மன அழுத்தத்தைக் குறைக்கும். மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். உடல்நீரின் அளவை சமமாக வைக்கும். மாரடைப்பு வராமல் தடுக்கும். இரத்த அழுத்தம் சீரான முறையில் இருக்கும். வாழைப்பழம் சாப்பிடுபவர்களுக்கு 40 சதவிகிதம் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு இல்லை.

பெண்கள் 4 முதல் 6 வாழைப்பழங்களை ஒவ்வொரு வாரமும் சாப்பிட்டு வந்தால் பல நோய்கள் வராது. புற்றுநோய் ஏற்படுத்தும் காரணிகளை விரட்டும் சக்தி வாழைப்பழத்திற்கு உண்டு.

புகைப்பிடிப்பதை நிறுத்த விரும்புபவர்கள் வாழைப்பழம் சாப்பிடலாம். நிக்கோடினால் வரும் பாதிப்பை வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின்கள், மெக்னீஷியம், பொட்டாசியம் போன்றவை குறைக்கும்.

வயிற்றில் உள்ள அமிலத்தின் அளவை குறைக்க உதவுவது வாழைப்பழம். வயிற்றின் உள்ளே இருக்கும் செல்களைத் தூண்டி அமிலத்திற்கு எதிராக ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திவிடுவதால் அல்சர் வருவதற்கான வாய்ப்புகள் குறையும்.

நரம்புகள் சுறுசுறுப்பாக செயல்படவும் இப்பழம் உதவுகிறது. ஆப்பிள் பழத்துடன் இதை ஒப்பிடலாம்.

வாழைப்பழத்தின் தோல்சத்து தாதுக்கள் போன்றவை. வாழைப்பழத்தோல் மனிதர்களின் தோலை மிருதுவாக்க உதவுகிறது. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவம் தேவையில்லை என்று ஆங்கிலத்தில் ஒரு சொல் உண்டு. இது வாழைப்பழத்துக்கும் பொருந்தும்.

-தேனி முருகேசன்

Ingen kommentarer:

Legg inn en kommentar