15.5.11

மார்பக புற்றுநோயை தடுக்க கொத்துமல்லி உதவும்



மார்பக புற்றுநோயைக் கட்டுப்படுத்த கொத்துமல்லி சாப்பிடலாம் என ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. இது புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.அமெரிக்காவின் யுனிவர்சிட்டி ஆப் மிசவுரியின் ஒரு பிரிவான கால்நடை மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த உயிரி மருத்துவ அறிவியல் பேராசிரியர் சல்மான் ஹைதர் தலைமையிலான குழுவினர் எலிகளைக் கொண்டு மார்பக புற்றுநோய் குறித்து ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.
எலிகளுக்கு செயற்கை கட்டிகளை உருவாக்கினர். அவற்றில் ஒரு பிரிவுக்கு அபிஜெனின் என்ற இரசாயன பொருள் வழங்கப்பட்டது. மற்றொரு பிரிவுக்கு வழங்கவில்லை. சிறிது நாட்களுக்கு பிறகு ஆய்வு செய்ததில் அபிஜெனின் உட்கொள்ளாத எலிகளை விட உட்கொண்ட எலிகளுக்கு கட்டியின் வளர்ச்சி குறைவாக இருந்தது.
இதன் அடிப்படையில் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் அபிஜெனின் முக்கிய பங்கு வகிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கொத்துமல்லியில் அதிக அளவில் அபிஜெனின் உள்ளது. இது தவிர ஆப்பிள், ஆரஞ்சு செடிகளிலும் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆய்வின் தலைவர் ஹைதர் கூறியதாவது: அமெரிக்காவில் உள்ள சுமார் 1 கோடி பெண்கள் ஹோர்மோன் மாற்று சிகிச்சை எடுத்துக் கொள்வதாக ஒரு ஆய்வு கூறுகிறது. இதனால் மார்பக புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகின்றனர். இதன் அடிப்படையில் எலிகளுக்கு பரிசோதனை செய்ததில் புற்றுநோய் செல்கள் வளர்வதை கொத்துமல்லி கட்டுப்படுத்துவது தெரியவந்துள்ளது.
G.JK Media Works Health Team 2011

Ingen kommentarer:

Legg inn en kommentar