21.10.11

துளசியின் மருத்துவ குணங்கள்

துளசியின் மருத்துவ குணங்கள் ஏராளம். அதற்கு ஆன்மீக மகத்துவமும் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடிதான்.
அவரவர் வசதிக்கேற்ப சிறிய தொட்டியில் கூட துளசி செடியை வளர்த்து வரலாம். ஆனால் அதனை கவனமாக பராமரிப்பது அவசியம். எளிதாகக் கிடைக்கும் துளசியில் மகத்துவங்கள் ஏராளம்.
1. தினமும் காலையில் 10 துளசி இலையை மென்று தின்பதால் இரத்தம் சுத்தியடையும். மார்பு வலி, தொண்டை வலி, வயிற்று வலி ஆகிய கோளாறுகள் நீங்கும்.
2. கண் பார்வைக் குறை உடையவர்கள் கண்களில் நேரடியாக இரண்டு சொட்டுத் துளசிச் சாற்றை விட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
3. துளசியைத் தினமும் உட்கொண்டு வந்தால் காது வலி, வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல், சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும்.
4. துளசி கஷாயம் வாய் துர்நாற்றத்தையும் பால்வினை நோய்களையும் நீக்கும்.
5. துளசிச் செடி அதிக அளவில் வளரும் இடங்களில் காற்றில் இருக்கும் புகை, கிருமிகள் போன்ற மாசுகள் அழிந்து காற்று மண்டலம் தூய்மை அடையும்.
6. வீடுகளில் துளசிச் செடிகளை வளர்ப்பதால் தூய்மையான காற்றைப் பெறலாம்.
7. துளசிச் செடியின் வாடையின் காரணமாக கொசுக்கள் வருவதில்லை. இதனால் மலேரியா நோய் பரவுவது தடுக்கப்படுகிறது. மலேரியா நோய் கண்டவர்கள் துளசி இலையைத் தினமும் மென்று உட்கொண்டு வந்தால் மலேரியா நோய் நீங்கும்.
8. தொழு நோயைக் குணமாக்கும் மருந்துகளில் அதிக அளவில் துளசி சேர்க்கப்படுகிறது.
9. உடலின் வெப்பத்தை ஒரே சீராக வைத்திருப்பதற்கு துளசி உதவுகிறது. துளசிச் சாறு சளித் தொல்லை, ஆஸ்துமா ஆகியவைகளைக் குணப்படுத்தும்.
10. துளசி ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது.
11. இருதயம் போன்ற உறுப்புகள் சீராக இயங்குவதற்கு துளசி உதவுகிறது.
G.JK Media Works Health Team 2011

Ingen kommentarer:

Legg inn en kommentar