15.2.12

குழந்தைகளுக்கு ஆஸ்துமா வராமல் தடுக்கும் தாய்ப்பால்

வாஷிங்டன், பிப்.13: குழந்தைகளுக்கு ஆஸ்துமா வராமல் தடுக்க தாய்ப்பால் பெரிதும் உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தாய்ப்பால் புகட்டுவதால் குழந்தைகளுக்கு 6 வயது வரை ஆஸ்துமா நோய் தாக்காமல் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.  ஒடாகோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மருத்துவக் குழு மேற்கொண்ட ஆராய்ச்சியில்,குழந்தைகளுக்கு பல்வேறு நோய்கள் வராமல் தடுக்கும் சக்தி கொண்டதாக தாய்ப்பால் விளங்குகிறது என்று கண்டுபிடித்துள்ளனர். குறிப்பாக ஆஸ்துமா எனப்படும் மூச்சுத் திணறல் ஏற்படுவதிலிருந்து 6 வயது வரை குழந்தைகளைக் காப்பதாக ஆராய்ச்சி மூலம் நிரூபித்துள்ளனர்.  இதற்காக நியூஸிலாந்தில் உள்ள 1,105 குழந்தைகளிடம் கடந்த 6 ஆண்டுகளாக மேற்கொண்ட ஆராய்ச்சியில் இது தெரியவந்துள்ளதாக இக்குழுவினர் வெளியிட்டுள்ள ஆராய்ச்சிக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  குறைந்தபட்சம் 3 மாதம் வரை தாய்ப்பால் புகட்டிய குழந்தைகளுக்கு 59 சதவீதம் பேருக்கு ஆஸ்துமா ஏற்படவில்லை. ஆறு ஆண்டுகளாக நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சி முடிவுகள் தாய்ப்பால் புகட்டுவதை மேலும் வலியுறுத்துவதோடு அதன் நன்மைகளை மக்களிடையே பரப்ப உதவும் என்று ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் டாக்டர் கேரன் சில்வெர்ஸ் தெரிவித்தார்.G.JK Media Works Health Team 2011

Ingen kommentarer:

Legg inn en kommentar