18.2.12

கீரையோ கீரை... முளைக்கீரை...

             பொருள் - உடல் மெலிவைப் போக்கும்.  குழந்தைகளுக்கு சளியைப் போக்கும்.  உடலுக்கு வலு கொடுக்கும்.  பசியைத் தூண்டும்.  நாவுக்கு சுவையளிக்கும்.  உடல் சூட்டைத் தணிக்கும்.

கீரைகள் மனிதனை வாழ்விக்க வந்த காமதேனு என்றே சொல்லலாம்.  கீரைகளின் பயன்களை அளவிடமுடியாது.  பழங்காலத்தில் நம் முன்னோர்கள் கீரைகளை அதிகம் உண்டு வந்ததால் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்ந்து வந்துள்ளனர்.  இவ்வகைக் கீரையில் முளைக்கீரையும் ஒன்று.

முளைக் கீரை தோட்டங்களில் வளர்க்கப்படும் கீரையாகும். இக்கீரையை இளங்கீரை என்றே சித்தர்கள் குறிப்பிடுகின்றனர். முளைக்கீரை பச்சை மற்றும் சிவப்பு நிறங்களில் காணப்படும். முற்றிய முளைக்கீரையே தண்டுக்கீரையாகும்.

முளைக்கீரையை நன்கு சுத்தமாக அலசி சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம் 1 ஸ்பூன், மிளகு 5, சின்ன வெங்காயம் 4, பூண்டுபல் 3, இலவங்கப்பட்டை இவற்றைச் சேர்த்து நீர்விட்டு வேகவைத்து நன்கு கடைந்து சாப்பிடலாம்.  பொரியலாகவும் சாப்பிடலாம்.  சூப் செய்தும் அருந்தலாம்.


இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட ஏற்ற உணவாகும்.


முளைக்கீரையை வாரம் ஒருமுறையாவது சமைத்து உண்பது நல்லது.

· இளைத்த உடல் தேறவும், தேகத்திற்கு வலு கிடைக்கவும் இது சிறந்த மருந்தாகும்.

· மலச்சிக்கலைப் போக்கும்.  அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.

· மூலநோய்க்காரர்களுக்கு இது சிறந்த உணவாகும்.  மூலநோயின் பாதிப்பைக் குறைக்கும்.

· நாவிற்கு சுவையைக் கொடுக்கும்.  நன்கு பசியைத் தூண்டும்.

· உடல் சூட்டைத் தணிக்கும்.

· கண் எரிச்சலைப் போக்கும்.  கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும்.

· நரம்புத் தளர்வைப் போக்கி நரம்புகளுக்கு  வலு  கொடுக்கும்.

· இருமல், தொண்டைப்புண் போன்றவற்றை குணமாக்கும் தன்மை கொண்டது.

· சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும்.

· இதில் அதிகளவு கால்சியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது.  அதனால் எலும்புகளுக்கு வலு கொடுப்பதுடன் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது.

· உடலில் உள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும்.

· சர்க்கரை நோயாளிகளுக்கு உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்கும்.

· இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

· மார்புச்சளி, தொண்டைச் சளியைப் போக்கும்.G.JK Media Works Health Team 2011

Ingen kommentarer:

Legg inn en kommentar