2.3.12

மீன் எண்ணெய் சாப்பிட்டால் மூளை இளமையாக இருக்கும்

தொடர்ந்து மீன் எண்ணெய் சாப்பிட்டு வந்தால் மனிதனிள் மூளை மிகவும் இளமையாக இயங்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மீன் எண்ணெயில், ஒமேகா-3 கொழுப்பு அமிலம் என்ற ஊட்டசத்து அதிக அளவில் உள்ளது.அமெரிக்காவில் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த ஒமேகா-3, மூளையை இளமையாக வைத்திருக்க உதவுவதாக கண்டறிந்துள்ளனர்.
67 வயதுள்ள சுமார் 1,500 பேரிடம் ஆய்வு நடத்தி, அவர்கள் இதை கண்டுபிடித்துள்ளனர். ஒமேகா அமிலத்தை குறைவாக சாப்பிட்டவர்களின் மூளை சுருங்கியும், ஞாபக மறதி, மனநிலை பிறழ்வு போன்ற பாதிப்புக்கும் ஆளாகி இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
எனவே ஒமேகா அமிலம் நிறைந்த மீன்களையும், மீன் எண்ணெயையும் சாப்பிட்டால் மூளை இளமையாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
G.JK Media Works Health Team 2011

Ingen kommentarer:

Legg inn en kommentar