2.3.12

உணவின் மகத்துவங்கள்


நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் இயற்கையில் விளைந்த காய், கனிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.இத்துடன் கீரை, பழங்கள் மற்றும் பச்சைக் காய்கறிகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கீரை, தானியங்கள், ஓட்ஸ், கொண்டைக்கடலை, கொள்ளு, பருப்பு, கேழ்வரகு ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஆரஞ்சு மற்றும் மஞ்சள் வண்ணக் காய்கறிகள் மற்றும் பழங்களும், மக்காச்சோளம் ஆகியவற்றையும் உணவில் சேர்க்கவும்.
அசைவ உணவுகள் வாரம் ஒருமுறை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். தினமும் ஒரு முட்டையை வேகவைத்து சாப்பிட வேண்டும்.
சுண்ட காய்ச்சிய பால் ஒரு நாளைக்கு நான்கு டம்ளர்கள் அருந்த வேண்டும். காய்கறிகளை அரை வேக்காட்டில் சாப்பிடுவதன் மூலம் கால்சியம் சத்து முழுமையாக கிடைக்கும்.
உலர்ந்த திராட்சை, பாதாம், காலிபிளவர், முட்டைக்கோஸ், வாழைப்பூ, வாழைத்தண்டு, வாழைப்பழம், மாதுளை மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவு வகைகளையும் தினமும் உணவில் சேர்க்கவும்.
இலுப்பைக் கொட்டையில் இருந்து எண்ணெய் எடுத்து இடுப்பில் தேய்த்தால் நிவாரணம் பெறலாம். உளுந்து, கோதுமை, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து அதில் வெந்நீரில் கலந்து பற்று போட்டால் மூட்டு வாதம், மூட்டு வலி குணமாகும்.
சின்ன வெங்காயத்தை அதிகளவில் உணவில் சேர்க்கலாம். இது வெயில் காலத்தில் ஏற்படும் நோய்களை தடுக்ககூடியது.
G.JK Media Works Health Team 2011

Ingen kommentarer:

Legg inn en kommentar