3.3.12

உடல் தளர்ச்சி நீக்கி, சந்ததி விருத்தி...
          னிதன் சிருஷ்டிக்கப் பிறந்தவன்; இறைவனையொத்தவன்; இறையம்சம் நிறைந்த ஆத்மாவை உடையவன்; இறையோடு கலத்தலில் இன்பிக்கக் கூடியவன். இறைவனின் பாதங்களில் சரணாகதி அடைந்து, தன் நற்செயல்களின் மூலம் முற்பிறவி கர்மாக்களைத் தொலைத்து ஆத்ம சுத்தி பெற ஒவ்வொருவரும் முனைய வேண்டும்.

ஆத்ம சுத்தி ஒன்றே சிருஷ்டிக்கான வழியாகும். மானுடன் ஆத்ம சுத்தியை சாதாரண வாழ்வியல் சூழலிலிருந்தே பெற்றுவிட முடியும். தேர்ந்தெடுத்த உணவுகள், தெளிவான பழக்க- வழக்கங்கள், சீர் தூக்கிக் காணும் நுட்பமான சிந்தனை, ஜீவகாருண் யம், மனித நேயம், சமூகம் சார்ந்த சேவைப் பாங்கு இவையனைத்துமே ஆத்ம சுத்திக்கான படிக்கட்டு களாகும்.

ஆத்ம சுத்தி செய்து கொண்ட ஆணும் பெண் ணும் திருமண பந்தத்தில் இணைந்து துய்க்கும் இன்ப நிலையே ஏற்புடையது. இவர்களின் இல்லறத் தில் உண்டாகும் குழந்தை மதிநுட்பம், ஆரோக் கியம், தேக காந்தி, வசீகரம் போன்ற அம்சங்களைப் பெற்று திறமைசாலியாய்ப் பிறக்கும்.


இங்கு நாம் நல்ல சந்ததி விருத்திக்காக அடையாளம் காணப்பட்ட கோரைக் கிழங்கு, எம்பிரான் சிவபெருமானின் ஆசீர்வாதத்திற்கு உட்பட்ட உணவுப் பொருளாகும். சிவாலயங்களில் அரிசி மாவுடன் கோரைக் கிழங்கும் சேர்த்துத் தரப் படுவதை நாம் அறிவோம்.


"என் நினைப்புடன்- ஆத்ம சுத்தியுடன் இல்லறத் தில் இணையுங்கள்' என்பதே எம்பிரானின் கட்டளை. அத்தகைய கோரைக் கிழங்கை மருந் தாக்கும் மகத்துவத்தை இனி அறிவோம்.


உயிரணுக்கள் பெருக...

கோரைக் கிழங்கு, நெருஞ்சில், தண்ணீர்விட் டான் கிழங்கு, ஆலவிதை, அரசவிதை, ஓரிதழ் தாமரை ஆகிய அனைத்தையும் வகைக்கு நூறு கிராம் வீதம் எடுத்து, ஒன்றாகக் கலந்து தூள் செய்து வைத்துக்கொள்ளவும். இதில் ஒரு ஸ்பூன் அளவு தூளை பசும்பாலில் கலந்து, காலை- இரவு இருவேளையும் சாப்பிட வேண்டும். இவ்வாறு மூன்று மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உயிரணுக் கள் அதிகரிக்கும்.

ஆண்மை சக்தி மேம்பட...

கோரைக் கிழங்கு, அமுக்கரா கிழங்கு, ஜாதிக்காய், வால் மிளகு ஆகியவற்றை வகைக்கு நூறு கிராம் எடுத்து, ஒன்றாகக் கலந்து தூள் செய்து வைத்துக் கொள்ளவும். இதில் ஒரு ஸ்பூன் அளவுக்கு காலை- இரவு இருவேளையும் சாப்பிட வேண்டும். தொடர்ந்து இரண்டு மாதங்கள் சாப்பிட்டு வந்தால் ஆண்மைக் குறைவு, நரம்புத் தளர்ச்சி, கை- கால் நடுக்கம், உடல் பலவீனம் போன்றவை குணமாகும்.

வெள்ளைப்படுதல் குணமாக...

கோரைக் கிழங்கு, அம்மான் பச்சரிசி, பாதாம் பிசின், மஞ்சள் ஆகியவற்றை வகைக்கு நூறு கிராம் எடுத்து, ஒன்றாகக் கலந்து தூள் செய்து வைத்துக் கொள்ளவும். இதில் ஒரு ஸ்பூன் அளவு தூளை காலை- மாலை இருவேளை யும் வெறும் வயிற்றில் சாப்பிடவும். இவ்வாறு 28 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல், மாத விடாய்க் கோளாறுகள், வயிற்று வலி ஆகியவை குணமாகும்.

குடல் சார்ந்த நோய்கள் தீர...

கோரைக் கிழங்கு, வில்வ ஓடு, மாதுளை ஓடு, ஓமம் ஆகியவற்றை வகைக்கு நூறு கிராம் அளவு எடுத்து, ஒன்றாகக் கலந்து தூள் செய்து வைத்துக்கொள்ளவும். இந்தத் தூளை காலை- மாலை இருவேளையும் ஒரு ஸ்பூன் அளவுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடல் சார்ந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்.

உடல் வலு உண்டாக...

கோரைக் கிழங்கு, பனங்கிழங்கு, அதிமதுரம், வால் மிளகு ஆகியவற்றை வகைக்கு நூறு கிராம் அளவு எடுத்து தூள் செய்து பத்திரப்படுத்தவும். இந்தத் தூளை ஒரு ஸ்பூன் அளவு காலை- மாலை இருவேளையும் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும்.

கருப்பை நோய்கள் தீர...

கோரைக் கிழங்கு, அசோக பட்டை, மருதம் பட்டை, ஆலம் பட்டை ஆகியவற்றை வகைக்கு நூறு கிராம் எடுத்து தூள் செய்து பத்திரப்படுத்தவும். இதில் ஒரு ஸ்பூன் அளவு தூளை காலை- மாலை இரு வேளையும் தொடர்ந்து இரண்டு மாதங்கள் சாப்பிட்டு வந்தால் கருப்பை சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் தீரும்.

சிவனருள் பெற்ற கோரைக் கிழங்கை முறைப்படி பயன்படுத்தி, சிறந்த மானிடர்களாய் விளங்குவோம்.
G.JK Media Works Health Team 2011

Ingen kommentarer:

Legg inn en kommentar