7.4.12

கிட்னி கல்லின் அற்குறிகளும், தடுப்பு முறைகளும்



கிட்னி கல்லின்  அறிகுறிகள்:

* சிறுநீரகத்தில் இருந்து கல் வெளியேறி குறுகிய சிறுநீர்க்குழாயில் நுழைந்து வெளியேற முடியாமல் தடைபடும்போது தாங்கமுடியாத வலி ஏற்படும். சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் உண்டாகும்.

* சில நேரங்களில் சிறுநீர் ரத்தத்துடன் கலந்து வெளியேறும். நீர்த்தாரையில் எரிச்சல் உண்டாகும். அளவில் சிறியதான கற்கள் சிறுநீர் மூலமாகவே வெளியேறிவிடும். தண்ணீர் அதிகம் அருந்தினால் சிறுநீர் கல் தானாகவே கரைந்து வெளியேறும்.

* தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சை மூலம் கல்லை வெளியேற்ற வேண்டிய அவசியம் ஏற்படும். சிறுநீரக கற்களை எக்ஸ் கதிர், கணினி அச்சு வெட்டு, நுண் ஒலி துருவு படங்கள் ஆகியவற்றின் மூலம் அறியலாம்.

* சிறுநீரக கற்கள் உள்ள நோயாளி தாமாகவே வெளிக்கொணரும் கற்களைஆராய்ந்து அதில் கால்சியம், பாஸ்பேட், ஆக்ஸலேட்களும் மிகுதியாக இருப்பதை அறியலாம். இவற்றை கொண்டு கற்கள் உருவாவதற்கான காரணங்களை அறிந்து அவற்றை அகற்ற வேண்டும்.

சிறுநீரக கல் வராமல் இருக்க தடுப்பு முறைகள்:

* அதிகமான பழங்கள் அன்றாட உணவில் சேர்ப்பது. அதிகமான காய்கறிகள் அன்றாடம் உட்கொள்வது. அதிகமான பருப்பு மற்றும் விதைவகைகள் உட்கொள்வது. குறைந்த கொழுப்பு சத்துள்ள பால் பொருட்கள் உட்கொள்வது.

* முழுமையான தானிய வகைகள் (மேல் தோல் நீக்கப்படாத தானிய வகைகள்) சேர்த்தல்
 குறைந்த அளவிலான உப்பு சேர்த்தல். குறைந்த அளவிலான இனிப்பு வகைகள் உட்கொள்ளுதல். குறைந்த அளவிலான இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி உட்கொள்ளுதல்.

* நார்ச்சத்து அதிகமான காய்கறிகள், பழ வகைகள், முழு தானிய வகைகள் மற்றும் பீன்ஸ் இவைகளை அதிகமாக ஆகாரத்தில் சேர்க்க வேண்டும்.

* முக்கியமாக அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். 8 முதல் பத்து தம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும். பாலில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளில் கால்சியம் அதிகம் இருப்பதால் அவற்றை குறைவாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.

* வைட்டமின் டி சத்துள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். மீன், உணவுக்காக வளர்க்கப்படும் லெகான் கோழிகள் போன்றவை சிறுநீரில் அமிலத் தன்மையை அதிகரிக்கச் செய்யும். எனவே இவற்றை உட் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

* பொரிக்கப்பட்ட மற்றும் மசாலா சேர்த்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, ராச்ப்பெர்ரி போன்ற பழவகைகளையும், பூசணிக்காய், வாழைத்தண்டு, போன்ற நீர்ச்சத்து மிகுந்த காய்களையும் நம் அன்றாட உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.

* வாட்டர் மிலன், ஆப்பிள், எலுமிச்சை பழச்சாறுகள் சிறுநீரக கற்களைக் கரைக்கும் தன்மை கொண்டவை. புரோட்டீன் அதிகமுள்ள இறைச்சி போன்ற பொருட்களைத் தவிர்ப்பது நல்லது. சாக்லேட், காஃபி, கீரைகள், டீ போன்றவற்றில் ஆக்ஸலேட் அதிகம் உள்ளது. இவற்றை தவிர்க்க வேண்டும்.

இந்த உணவு முறைகளை பின்பற்றி வந்தால் கிட்னி கல் வருமுன் காக்கலாம்.
G.JK Media Works Health Team 2011

Ingen kommentarer:

Legg inn en kommentar